Header Ads



முஸ்லிம் மாண­வர்­களின் தொகை வீழ்ந்தது, ஆராயுமாறு கல்­வி­ய­மைச்சிடம் கோர தீர்­மானம்

இவ்­வ­ருடம் தேசிய கல்வியியல் கல்­லூ­ரி­க­ளுக்கு கடந்த வரு­டங்­க­ளையும் விடக் குறை­வான முஸ்லிம் ஆசி­ரிய மாணவ மாண­வி­களே தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளதால் இது தொடர்பில் ஆராய்ந்து இக் குறையைத் தீர்க்­கு­மாறு கல்­வி­ய­மைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வ­சத்தை கோரு­வ­தற்கு அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு தீர்­மானம் நிறை­வேற்­றி­யுள்­ளது. வாமி நிறு­வனத்தின் கேட்போர் கூடத்தில் பேரா­சி­ரியர் எம்.எஸ்.எம். அனஸ் தலை­மையில் நடை­பெற்ற அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் கூட்­டத்தில் இத் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.

கொழும்பு முஸ்லிம் பாட­சா­லை­களின் கல்வித் தரத்தை மேம்­ப­டுத்­து­வது தொடர்பில் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியைச் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கும் கொழும்பு தெற்­குக்கு  தமிழ் மொழி ஆண்கள் பாட­சா­லை­யொன்­றினைக் கோரு­வ­தற்கும்  தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

அத்­தோடு முஸ்லிம் பாட­சா­லை­களின் வர­லாற்றைத் தொகுத்து நூல் ஒன்­றினை வெளி­யி­டு­வ­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. கூட்­டத்தில் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் செய­லாளர் சட்டத்தரணி ரசீத் எம். இம்தியாஸ், உப தலைவர் என்.எம். அமீன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
-Vidivelli

No comments

Powered by Blogger.