சிகரட்+ போதைப்பொருள் விற்பனையை கல்முனையில் முழுமையாக கட்டுப்படுத்த திட்டம்
கல்முனை பிரதேசத்தில் புகைத்தல் , போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை ஆகியவற்றை இல்லாமல் செய்து புகைத்தல் மற்றும் போதைப் பொருள் பாவனையற்ற சமூகத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் அங்கமாக,
சிகரட் விற்பனையை கல்முனை பிரதேசத்தில் முழுமையாக கட்டுப்படுத்தும் முகமாக கல்முனை பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் நேரடியாக சென்று தெளிவுட்டும் செயற்திட்டம் இன்று (24) ஆரம்பிக்கப்பட்டது.
கல்முனை புகைத்தல், போதைப் பொருள் ஒழிப்பு செயலணியின் தலைவர் டாக்டர் எஸ்.எம் ஏ.அஸீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்
கல்முனை புகைத்தல் போதைப் பொருள் ஒழிப்பு செயலணியின் நிர்வாகிகளான
உலமாக்கள் பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள், அரசாங்கா சார் திணைக்களங்களின் பிரதிநிதிகள், சமுக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் இவ் விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மேலும் இதன் போது வர்த்தக நிலையங்களுக்கு புகைத்தல் தொடர்பான துண்டுபிரசுரங்களும் விநியோககிக்கப்பட்டதுடன் அறிவுறுத்தலும் வழங்கப்பட்டு புகைத்தல் எதிர்ப்பு விழிப்பூட்டல் ஸ்டீக்கர்களும் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Alhamthulillah
ReplyDeleteRompa late aaidu ithai seirathukku
Any way do it fast plz and save our next generation.
Great.
ReplyDeleteMay Almighty Allah be with you all to make it happen.