கட்டாரில் இலங்கையர்களுக்கு உள்ள மதிப்பும், நமது நாட்டின் பெறுமதியும்...!!
இலங்கைக் குட்டித் தீவின் பெறுமதி அதனைக் கடந்து வந்து பார்த்தால் புரிகிறது. Where are you from, (من أين أنت மின் அய்ன அன்த) நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என பிற நாட்டவர் கேட்கும் போது i'm from Srilanka, انا من سريلانكا 🇱🇰 நான் இலங்கை நாட்டைச் சேர்ந்தவன் என சொல்லும் போது அவர்களின் புருவ உயர்த்தலிலே புரியும் நம் நாட்டின் மீதான அவர்கள் வைத்துள்ள மதிப்பு. நாம் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனக் கூறும் போது எமதுள்ளத்தில் ஏற்படும் குதூகலம் தாய் நாட்டை நேசிக்கும் ஒவ்வொருக்கும் இருக்கவே செய்யும்.
எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒரு இரசாயனப் பொறியியலாளர்(Chemical Engineer) பின்வருமாறு ஒரு கேள்வியை என்னிடம். தொடுத்தார்.
இலங்கையிலும் மியன்மாரைப் போன்று நிகழ்வுகள் நடக்கின்றதாமே?? சிறிது காலத்திற்கு முன் பத்திரிகையில் பார்த்ததாக அவர் சொன்ன போது ஒருகனம் அதிர்ந்து போனேன்.
இலங்கையில் என்ன நடந்தது, இப்பொழுது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை எனதறிவுக்கு எட்டிய வகையில் தெளிவுபடுத்தினேன். அவரும் ஆர்வத்தோடு செவிமடுத்தார்.
அன்பின் இலங்கை மண்ணின் மைந்தர்களே!!!
அண்மைக்காலமாக எமது சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துக்கொண்டிருக்கின்ற இந்நிலையில்; இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழிக்க கைகோர்த்திருக்கும் பொது எதிரிக்கு நாங்கள் தீணியாக மாறும் காலம் வெகுதொலைவில் இல்லையென்பது புரிகிறது.
எங்களுக்குள் நிகழும் தனிமனித வசைபாடல்கள்,காட்டிக்கொடுப்பு, இயக்கவெறி, மார்க்கத்தின் பெயராலான பிரிவுகள், போதைப்பொருள் பாவனை போன்ற இன்னோரன்ன செயற்பாடுகள் இல்லாமல் போகாத வரை 71ம் சுதந்திர தினத்தின் பின்னர் மீண்டுமொரு கறுப்பு நாள் எமது சமூகத்தின் மீது ஏற்படுத்தப்படும்.
ஒரு மனிதன் தவறிழைக்கும் போது அதனை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு இஸ்லாம் வழிகாட்டியிருக்கிறது. தனது சுயநலத்திற்காக தவறிழைப்பவனை அழகிய முறையில் அணுகாது காட்டிக்கொடுப்பது மேலை பார்த்து துப்புவதைப் போன்றதாகும்.
இலங்கைத் தீவில் அமைதி, சுபீட்சம், ஒற்றுமை, விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை போன்ற வாசகங்களுக்கு இஸ்லாத்தைப் சுமந்தவர்கள் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். இலங்கை மண்ணில் இஸ்லாமிய சமூகத்துக்கெதிராக மீண்டுமோர் அராஜகம் கட்டவிழ்த்துவிட எமது நடவடிக்கைகள் காரணமாக அமையக் கூடாது. இலங்கைத் தேசிய கீதத்தில் உள்ள ஒரு தாய் மக்கள் என்ற வாசகம் வெறும் வார்த்தையாகவன்றி நடைமுறைப்படுத்தவும் முயற்சி செய்வோம்.
(இவ்வாசகத்தை வேறுவிதமாகப் புரிந்து கொண்டால் நான் பொறுப்பல்ல☺️)
எமது சமூகத்தின் அரசியல்,சிவில், மார்க்கத் தலைமைகள் தங்கள் பொறுப்புக்களை பொதுநலத்துடன் நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றவில்லை எனக்கூறவில்லை, இன்னும் வேகமாகச் செயற்பட வேண்டும்.
எமது சமூகத்தின் உள்ளக விமர்சனங்கள் எம் மீது பாயக் காத்திருக்கின்ற பொது எதிரிக்கு சந்தர்ப்பமாக அமையாமல், அவற்றை உரிய தரப்பை அணுகி அவசரமாகத் தீர்வு காணப்பட வேண்டும்.
(உதாரணமாக, அண்மைக்காலமாக மக்தப் பாடத்திட்டத்தின் மீது பொதுத்தளங்களில் இடம்பெறும் காரசாரமான வாதப்பிரதிவாதங்கள்).
71வது சுதந்திர தினம் கடந்து போகும் ஒரு நிகழ்வாக அல்லாது எமது சமூகத்தின் இருப்பை யதார்த்தப்படுத்தும் திட்டங்கள் அரங்கேர நாம் இலங்கை மண்ணின் மைந்தர்கள் என்ற வகையில் முனைப்புடன் செயற்பட வேண்டும். (வெற்றிகரமாக நடைபெற்று வரும் திறந்த பள்ளிவாயல் நாள், எங்கள் பள்ளிவாயலத் தரிசியுங்கள் போன்ற நிகழ்வுகள்).
எமது செயற்பாடுகளை அழகிய முறையில் அமைத்து, அரசியல் காய்நகர்த்தல்களுக்குள் சிக்கி விடாமல், இந்நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணி கடமைகளைச் சரிவரச்செய்து உரிமைகளை வெல்வோம்.
கட்டாரிலிருந்து
அபூ ஆய்ஷா மனால் ஹாபிழ் ஸப்ரான்.
*2/2/2019*
Thanks for the report. We always love our motherland. we have to involve in all the ways to develop the country. In fact, Muslims in Sri Lanka historically engaged in many ways to develop the country. First policeman who was killed for the sake of the country in Sri Lanka is a Muslim.
ReplyDelete