Header Ads



முதலிடத்தை பிடித்தது, போருத்தொட்ட அல்பலாஹ் கல்லூரி (படங்கள்)


"முழு நாட்டுக்கும் ஒளி  , எத்திசைக்கும் ஒளி" என்ற தொனியில்   இலங்கை மின்சார சபையும் , இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபணம் கல்வித் திணைக்களம்  இணைந்து  நடாத்திய, அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான அறிவு கணிப்பு போட்டித் தொடர்     மேல்மாகாணத்தின் நீர்கொழும்பு  மற்றும்  மினுவாங்கொடை   கல்வி  வளையங்களுக்கு இடையேயானதாகும்.  இப்போட்டிகளில் ஒன்பது பாடசாலைகளின் மாணவர்கள்  கலந்து கொண்டனர்.

இந்தப்போட்டி  நிகழ்ச்சி   நீர்கொழும்பு அல்ஹிலால் மத்திய கல்லூரியில் சென்ற 31 01 , 2019.அன்று நடைபெற்றது.

இதில்  ஆகக்கூடுதலான (  700 க்கும்)  மேல் புள்ளிகளைப் பெற்று அல்பலாஹ் கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதன் மூலம் அல்பலாஹ் கல்லூரிக்கும், ஆசிரியர்களுக்கும் ஊருக்கும் பெறுமையைத் தேடித்தந்துள்ளார்கள், மாணவிகளுக்கு பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்கள்

 பார்வையாளர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கான  விடையையும் எமது அல்பலாஹ் கல்லூரி மாணவர் அணித் தலைவி  M A F.அம்ரா சரியான பதிலைக் கூறி பெறுமதி வாய்ந்த பரிசுகளை பெற்றுக்கொண்டார். எமது அல்பலாஹ் கல்லூரி  சார்பாக இப்போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள்  *M A F.அம்ரா , M I F .அத்தியா,  M I. நுஹா. M M F. அப்ரா ஆகியோர்களாவர்.

 நூற்றாண்டை நோக்கிய நீர்கொழும்பு பிரதேசம்  போருத்தொட்டை அல் பலாஹ் கல்லூரி மாணவர்களின் கல்வியிலும்  பாரிய முன்னேற்றம் காணப்படுவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது  என்ற செய்தி   கல்லூரியின்  கல்வி வளர்ச்சிக்காகவும்  பெளதீகத் தேவைக்காகவும்  பங்களிப்புச் செய்யும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும் என்ற நம்பிக்கையில் இத்தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

- HAM. Faiseen -


2 comments:

  1. I appreciate the effort of these students. Since this school had two separate spots meet for boys and girls last week, my doubt is, how the school authorities allowed this event to be held mixing the boys and girls together?

    Any thing is too much, good for nothing.

    ReplyDelete
  2. ஒரு நூற்றாண்டு நிறைவை நோக்கிச் செல்லும் போருதொட்ட அல் -பலாஹ் கல்லூரி மாணவர்களின் திறமை பாராட்டுக்குரியது. அவர்களை நெறிப்படுத்தி ஊருக்கு பெருமை தேடித் தந்த ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete

Powered by Blogger.