இப்படியும் தொலைபேசியை திருடுகிறார்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)
இணையத்தளங்களில் வெளியிடப்படும் செல்போன் விளம்பரங்களுக்கு அமைய அவற்றை கொள்வனவு செய்ய சென்று போலி குறுஞ் செய்தியைகாட்டி மோசடியில் ஈடுபட்ட இளைஞனை கட்டுநாயக்க பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
21 வயதான இந்த இளைஞன், முதலில் காலி, ஹிக்கடுவை, பின்னர் கொழும்பு நுகேகொடையில் வசித்து வந்துள்ளதுடன், இந்த பிரதேசங்களில் இரண்டு திருமணங்களை செய்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்டவிசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நபர், இணையத்தளங்களில் விளம்பரம் செய்யும் செல்போன் உரிமையாளர்களை தொடர்புக்கொண்டு அவர்களை சந்தித்து செல்போனை பரிசோதித்த பின்னர், உரிமையாளர்களின் விலைக்கு அதனை வாங்க இணங்கியுள்ளார்.
இதன் பின்னர், செல்போன் உரிமையாளர்களின் வங்கிக் கணக்கை பெற்றுக்கொண்டு, தொலைபேசி மூலம் தனது வங்கிக் கணக்கில் பணத்தை மாற்றியதற்கான வங்கி அனுப்பும் குறுஞ்ச் செய்தியை காட்டி செல்போனை எடுத்துச் சென்றுள்ளார்.
வங்கிக் கணக்கில் பணம் வந்துள்ளதா என செல்போன் உரிமையாளர்கள் வங்கியிடம் விசாரிக்கும் போது அப்படியான பண பரிமாற்றம் நடக்கவில்லை என வங்கியில் உள்ளவர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து இளைஞனிடம் விசாரிக்கும் போது அது இணையத்தளத்தால் ஏற்பட்ட தாமதமாக இருக்கலாம் அது சற்று நேரத்தில் சரியாகும் என செல்போன் உரிமையாளர்களிடம் கூறி வந்துள்ளார்.
இவ்வாறு தந்திரமாக கொள்ளையிடும் செல்போன்னை சந்தேகம் விற்பனை செய்துள்ளார். இவ்வாறு தம்மிடம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெஹிவளை, பாணந்துறை, கல்கிஸ்சை, மிரிஹான, கட்டுநாயக்க பொலிஸ் நிலையங்களில் பலர் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டை அடுத்து கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார், செல்போன் விற்பனைக்கு இருப்பதாக இணைத்தளத்தில் விளம்பரம் செய்துள்ளனர்.
குறித்த இளைஞன் செல்போனை பெற்றுக்கொள்ள கட்டுநாயக்க பிரதேசத்திற்கு சென்றிருந்த போது பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Post a Comment