ஜனாதிபதி செயலகத்தில் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக, சேகரிக்கப்பட்ட இனவாத கையொப்பங்கள் ஒப்படைப்பு
இன வாதம் பேசுகின்ற கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக கடந்த 18 ஆம் திகதியிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்கள் அனைத்தும் மகஜர் கடித்தத்துடன் தயார் செய்யப்பட்டு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மற்றும் எதிர்க்கட்சித்தலைவரும் பிரதிகள் அனுப்பி வைத்துள்ளோம் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் வீ.கமலதாஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் தமது கட்சி சார்பாக மக்கள் மத்தியில் சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய மகஜரினை ஜனாதிபதி செயலாளரிடம் கையளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்தும் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக சேகரித்த கையெழுத்துக்கள் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு கையளிக்கும் வகையில் அவரது செயலாளர் சமந்தி ரணசிங்க என்பவரிடம் ஒப்படைத்துள்ளோம்.
இதற்கான முடிவுகள் மிகவிரைவில் தொடர்பு கொள்வதாகவும் கூறியுள்ளனர்.
அத்துடன் இப்பதவிக்கு மிகவும் பொருத்தமான ஒருவரை ஜனாதிபதி நியமிக்க வேண்டும். கடந்த காலங்களில் தனது அதிகாரங்களை பயன்படுத்தி நீதிபதியை மாற்றியவர்.
இந்து ஆலயங்களை உடைத்து பள்ளிவாசல் கட்டுனேன் என கூறும் ஒருவரை நாம் ஒருபோதும் கிழக்கு மாகாணத்தை ஆள விடக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த மகஜர் இந்நேரம் ஜனாதிபதி வீட்டு குப்பைத்தொட்டியில் இருந்திருக்கும். இந்த தமிழ் பயங்கரவாதிகளை கணக்கில் எடுத்திருந்தால் ஜனாதிபதி என்றோ ஹிஸ்புல்லாஹ்வை தூக்கிருக்க வேண்டும்
ReplyDeleteGem is being cut and polished. Let the dogs to bark.
ReplyDelete