Header Ads



பாராளுமன்றத்திற்குள் யாராவது கொலையானால், சிறப்புரிமை என்று கூறி மூடிமறைக்க முடியுமா?

நாட்டின் சட்டத்திற்கு முரணாக செயற்பட்டு சிறப்புரிமையின் கீழ் சலுகை பெற முடியாது என சபை முதல்வரும் அமைச்சருமான லக்‌ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற சிறப்புரிமையானது நாட்டின் பொதுவான சட்டத்திற்கு உட்பட்டதாகும். எம்.பிகள் என்பதற்காக அவர்களுக்குத் தனியான சட்டம் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எம்.பிகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன. எம்.பிகள் மீது குற்றச்சாட்டு எழுமானால் அவற்றில் இருந்து அவர்களைப் பாதுகாப்பது சபை முதல்வரின் பொறுப்பாகும். சில எம்.பிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சி.ஐ.டிக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்திற்குள் யாராவது கொலையானால் சிறப்புரிமை என்று கூறி அதனை மூடிமறைக்க முடியுமா? சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக கட்டாயம் சட்ட நடவடிக்கை எடுக்க ​வேண்டும். பாராளுமன்றம் தெரிவாகும் எம்.பிகள் முன்மாதிரியாக செயற்பட வேண்டும்.

எதிர்க்கட்சியில் ஐ.தே.க இருந்தபோது இவ்வாறு அநியாயங்கள் நடக்கவில்லை. ஆட்சி அதிகாரத்திற்கு வரும் பேராசையில் இவ்வாறு பொறுமையின்றி செயற்படுகிறார்கள் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஹொரவப்பொத்தானை தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.