Header Ads



8 மாண­வர்கள் விடு­தலை விவகாரம் - மைத்­திரி, ரணில், சஜித்­துடன் பேச்சு - நாளை விடுவிக்கப்படுவார்களா..?

ஹொர­வப்­பொத்­தான கிர­லா­கல தூபியில் ஏறி புகைப்­படம் எடுத்த விவ­காரம் தொடர்பில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த 8 மாண­வர்­களின் விடு­தலை தொடர்பில் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை, கலா­சார அமைச்சர் சஜித் பிரே­ம­தாச மற்றும் தொல்­பொருள் திணைக்­களப் பணிப்­பாளர் நாயகம் பி.பீ.மண்­டா­வெல ஆகி­யோ­ருடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தி­யுள்­ளனர்.

நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்பு, நகர திட்­ட­மிடல் மற்றும் உயர்­கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம், கைத்­தொழில் வர்த்­தக அமைச்சர் ரிசாத் பதி­யுதீன், மாகா­ண­ச­பைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி இரா­ஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ் ஆகி­யோரே இவ்­வாறு பேச்­சு­வார்த்­தை நடாத்­தி­யுள்­ளனர்.

குறிப்­பிட்ட 8 தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் அறி­யாத்­த­னத்­தி­னாலே இவ்­வாறு கிர­லா­கல தூபியில் ஏறி புகைப்­படம் எடுத்து சமூக வலைத்­த­ளத்தில் பதி­வேற்­றி­யுள்­ளார்கள். அதனால் அவர்­களை மன்­னித்து விடு­தலை செய்ய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் கோரிக்கை விடுத்­துள்­ளனர். இவ்­வி­வ­காரம் தொடர்பில் மாகா­ண­ச­பைகள், உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் இரா­ஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­விக்­கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீமும் நானும் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ச­வுடன் கதைத்­தி­ருக்­கிறோம். தொல்­பொருள் பணிப்­பாளர் நாயகம் பி.பீ மண்­டா­வ­ல­வி­டமும் கதைத்­துள்ளோம். அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிர­த­ம­ருடன் கதைத்­துள்ளார்.

பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­கெ­தி­ரான குற்­றப்­பத்­தி­ரி­கையை தொல்­பொருள் திணைக்­க­ளமே தயா­ரிக்கும். கலா­சார அமைச்­ச­ராகப் பணி­பு­ரியும் சஜித் பிரே­ம­தாச தொல்­பொருள் திணைக்­கள பணிப்­பாளர் நாய­கத்­துக்கு அறி­வு­றுத்­தல்கள் வழங்­கி­னாலே விடு­த­லைக்­கான சாத்­தி­யங்கள் உள்­ளன. குற்­றப்­பத்­தி­ரிகை தண்­டனை சட்­டக்­கோ­வையின் கீழ் தயா­ரிக்­கப்­பட்டால் சம்­பந்­தப்­பட்ட மாண­வர்­களைப் பிணையில் எடுக்­கலாம். தொல்­பொருள் சட்­டத்தின் கீழ் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்டால் பிணையில் எடுக்க முடி­யாது. நான் தொல்­பொருள் திணைக்­கள பணிப்­பாளர் நாய­கத்தை நேரில் சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­தினேன். ஆனால் அவர்­க­ளுக்கு மன்­னிப்பு வழங்கி விடு­த­லை­ய­ளிப்­பது தொடர்பில் சாத­க­மாகப் பதில் கிடைக்­க­வில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மாண­வர்­க­ளுக்கு மன்­னிப்பு பெற்­றுக்­கொ­டுப்­பது தொடர்பில் தொடர்ந்தும் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கி­றது என்றார்.

இதே­வேளை, குறிப்­பிட்ட பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்கு மன்­னிப்பு வழங்கி விடு­தலை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சர் ரிசாத் பதி­யுதீன், வீட­மைப்பு , நிர்­மா­ணத்­துறை மற்றும்  கலா­சார அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ச­வு­டனும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ள­தாகத்  தெரி­வித்தார். கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்­புல்­லாஹ்வும் அமைச்சர் சஜித் பிரே­ம­தாச மற்றும் தொல்­பொருள் பணிப்­பாளர் நாயகம் பி.பீ.மண்­டா­வ­ல­யுடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தி­யுள்­ள­தாகத் தெரி­வித்தார்.

குறிப்­பிட்ட மாணவர்கள் நாளை 5 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை கெப்பித்திகொல்லாவ நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளனர்.

சந்தேக நபர்களான பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான சிராஸ் நூர்தீன், ருஸ்தி ஹபீப் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவொன்று ஆஜராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

1 comment:

Powered by Blogger.