கட்டார் வாழ் இலங்கை உலமாக்களின் 71வது சுதந்திர தின ஆசிச் செய்தி.
மனிதர்கள் தமது சுதந்திரத்திற்காக மேற்கொண்ட போராட்டங்களினால் மானுட வரலாறு அழகு பெற்றுள்ளது. இலங்கையரான நாமும் அவ்வாறான பெருமைமிகு சுதந்திரப் போராட்ட வரலாற்றுக்கு உரித்துடையவர்களே.
பல நூற்றாண்டுகளாக நீடித்த மன்னராட்சிக் காலத்திலிருந்து நவீன ஜனநாயகம் வரை நாம் கடந்து வந்த பயணத்தில் அவ்வாறான போராட்டங்கள் பற்றிய இதமான நினைவுகளுடன், கசப்பான நினைவுகளும் பதிவாகி இருக்கின்றன.
சுதந்திரத்துக்காக பாடுபட்ட எம் முன்னோர்களினதும் மக்களினதும் தியாகத்துக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம். உண்மையிலேயே அவர்கள் சிந்திய வியர்வையும், இரத்தமும், சுவாசமும் கலந்த தியாகத்தையே வரலாறு எமக்கு உணர்த்துகின்றது.
இருளில் மூழ்கிக் கொண்டிருந்த ஜனநாயகத்தையும், மனிதாபிமானத்தையும் மீண்டும் சுடர்விட வைப்பதிலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம். ஆயினும் சுதந்திரத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்க வேண்டுமாயின் வறுமையிலிருந்தும் நோய்களிலிருந்தும் விடுபடுவது மட்டுமின்றி இன, மத சாதி பேதம் போன்ற வரையறைக்குள் சிறைப்பட்டுள்ள மக்களையும் சமூகத்தையும் அவற்றிலிருந்து விடுவித்து மனித உரிமைகள் மற்றும் நீதிநெறிகளை மதிக்கும் தேசத்தை உருவாக்க வேண்டும்.
தற்போது எமது நாடு ஆசியாவின் அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளில் பட்டியலில் இடம் பிடித்துள்ளது
எனவேதான் நாம் எமது நாட்டை ஒரு சிறந்த நாடாக மற்ற வேண்டும் அதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் விடயம்தான் போதையற்ற நாடாக எமது நாட்டை நாம் ஆக்க வேண்டும்.
அதற்காக எமது நாட்டின் ஜனாதிபதி கொரவ மைத்திபால சிரிசேன அவர்களால் பல செயற்திட்டங்கள் இடம் பெற்று வருகின்றன.
அதற்காக ஒரு தனி குழுவையும் அமைத்து மிகச் சிறப்பாக செயற்பட்டு வருகின்றார்கள்.
குறிப்பாக தற்காலத்தில் எமது இளைஞர்களை காவு கொண்டுள்ள போதை வஸ்துக்களை ஒழித்து வளமிக்க ஒரு சிறந்த நாடாக எமது நாட்டை ஆக்க அனைவரும் இன மத பேதம் இன்றி வருமாறு கட்டார் வாழ் இலங்கை உலமாக்கள் ஒண்றியம் அனைத்து பொது மக்களையும் கேட்டுக் கொள்கின்றது.
71வது சுதந்திர தின ஆசிச் செய்தியில் கட்டார் வாழ் இலங்கை உலமாக்கள் ஒன்றியம் தெரிவித்துக்கொள்கின்றது.
தகவல்:
அஷ்ஷேய்க் முஹம்மது இஸ்மாயீல் புஹாரி (ஹாமி)
பொதுச் செயலாளர்,
கட்டார் வாழ் இலங்கை உலமாக்கள் சபை,
டோஹா ,கட்டார்.
Post a Comment