7 மாணவர்கள் சார்பில், சிராஸ் நூர்தீனும் ஆஜராகிறார்
- AAM. Anzir -
அநுராதபுர சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 7 தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சர்பில், எதிர்வரும் 5 ஆம் திகதி, செவ்வாய்கிழமை மூத்த சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் ஆஜராகவுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர்கள், சமூக நலன் விரும்பிகள் மேற்குறித்த 7 மாணவர்களையும் விடுவிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, மாணவர்களின் பெற்றோர்களும் சிராஸ் நூர்தீனை கொழும்பில் சந்தித்து, தமது மகன்களின் விடுதலைக்கு உதவும்படி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் சார்பில், சிராஸ் நூர்தீனும் ஆஜராகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக சிந்தனை கொண்ட நல்லதோர் சட்டத்தரணி
ReplyDelete