545 கைதிகள் விடுதலை, ஞானசாரருக்கு என்னாச்சு...?
71ஆவது தேசிய தினத்தையொட்டி ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டிய கைதிகள் தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதென, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாடுபூராகவுமுள்ள சிறைச்சாலைகளிலிருந்து 545 கைதிகள் நாளைய தினம் விடுதலை செய்யப்படவுள்ளனரென, சிறைச்சாலைகள் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் நாளைய தினம் 518 கைதிகளே விடுதலை செய்யப்படுவரென்றும் ஏனைய 27 கைதிகளுக்கும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கினாலும், அவர்கள் செய்துள்ள ஏனைய குற்றங்களுக்காக தொடர்ந்தும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படுவார்களெனவும் அவர்கள் இன்றைய தினம் விடுதலை செய்யப்படமாட்டார்களெனவும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் விடுதலை செய்யப்படவுள்ள கைதிகளில் 4 பெண் கைதிகளும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசாரர் விடுதலை செய்யப்படுவாரா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
Post a Comment