இந்தாண்டில் இதுவரையில் 520 கிலோ ஹெரோயினுடன் 6651 பேர் கைது
2019 ஆம் ஆண்டில் இதுவரையில், 520 கிலோ 762 கிராம் ஹெரோயினுடன், 6,651 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் மற்றும் நாட்டிற்கு போதைப்பொருள் எவ்வாறு கொண்டு வரப்படுகின்றது என்பது தொடர்பிலான தகவல்களை எதிர்வரும் நாட்களில் வௌியிட முடியும்என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கருத்துத் தெரிவித்துள்ளார்.
Post a Comment