Header Ads



யாழ்ப்பாணத்தில் 4.4 பில்லியன் முதலீட்டில் 2 காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.

வாயு சக்தி விற்பன்னர் தனியார் நிறுவனம், 2.2 பில்லியன் ரூபா முதலீட்டில் ஒரு காற்றாலை மின் நிலையத்தையும்,  யாழ் வாயு பகவான் தனியார் நிறுவனம் 2.2 பில்லியன் ரூபா முதலீட்டில் மற்றொரு காற்றாலை மின் நிலையத்தையும் அமைக்கவுள்ளன.

இந்த நிறுவனங்கள், 10 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவுள்ளன.

இதன் மூலம், எரிபொருள் மூலம் பூர்த்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு குறைக்கப்படும் என்றும்ம் முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.

3 comments:

  1. If they dint payed the Commission to the politicians there will be a mass public protest

    ReplyDelete
  2. Haha.. nice translation of company names, the correct name is Windforce (Pvt) Ltd, a JV of Akbar Brothers,Hidramani Group and Esna holdings. The other one also the same party with a different name.

    ReplyDelete

Powered by Blogger.