Header Ads



என் மீதான 2 குற்றசர்சாட்டுக்களை ஏற்றுக்கொள்கிறேன் - சனத்

தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டின் ஊழல் எதிர்ப்பு விசாரணைகளுக்கு ஒத்துழைக்காமை தொடர்பில் சனத் ஜெயசூரியவுக்கு இரண்டு வருடகால கிரிக்கெட் தடை இன்று விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமது ரசிகர்களுக்கு சனத் ஜெயசூரிய, அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் விசாரணைகளுக்கென கையடக்கத்தொலைபேசி மற்றும் சிம் அட்டை ஆகியவற்றை சர்வதேச கிரிக்கெட் சம்மேளன அதிகாரிகளுக்கு வழங்காமை குற்றமாகும்.

மிகவும் தனிப்பட்ட காரணங்களுக்காகவே தாம் விசாரணை அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவில்லை என்று சனத் ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தம்மீது உட்புற தகவல்களை வெளியிட்டமை மற்றும் மோசடி, காட்டிக்கொடுப்பு போன்ற குற்றங்கள் எவையும் சுமத்தப்படவில்லை என்பதை சனத் ஜெயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comment:

  1. Very Very Shame on Him.
    All this happen because of he Joined Politics.
    Political Criminal mind took him to this kind of shameful situation.
    Very Sorry about this Legend.

    ReplyDelete

Powered by Blogger.