கைதான 2 மாணவர்களை விடுவிப்பதில், முஸ்லிம் கவுன்சில் தீவிரம்
மிகிந்தலையில் பௌத்த புராதன சின்னத்தில் ஏறி புகைப்படம் எடுத்தமைக்காக, கைது செய்யப்பட்ட 2 மாணவர்களை விடுவிக்கும் முயற்சியில் முஸ்லிம் கவுன்சில் இறங்கியுள்ளது.
குறித்த 2 மாணவர்களும் தமது அறியாமையினாலே இதனைச் செய்துள்ளதாக அறியவந்துள்ள நிலையில், முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் இதுகுறித்து அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் செயலாளருடன் பேசியுள்ளார்.
அத்துடன் தொல்பொருள் ஆராய்ச்சி நிலையம், குறித்த மாவணர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு அறிக்கையை தாக்கல் செய்வதிலும் தாமதம் காட்டி வருகிறது.
இந்நிலையில் நாளை புதன்கிழமை, இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
Post a Comment