Header Ads



மாணவனை தண்டித்த, ஆசிரியைக்கு 2 வருட சிறை - குருணாகல் நீதிபதி அதிரடி

பாடசாலை மாணவர் ஒருவரைத் தண்டித்த குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை ஆசிரியை ஒருவருக்கு குருணாகல் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இன்று (01) கடுமையான வேலையுடன் கூடிய இரண்டு வருட சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

55 வயதுடைய குருணாகல் நகரிலுள்ள ஆசிரியை ஒருவருக்கே  இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபா தண்டப் பணத்தைச் செலுத்துமாறும் குருணாகலை மஜிஸ்ட்ரேட் நீதிபதி மேனகா விஜேசுந்தர குறித்த ஆசிரியைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த ஆசிரியையினால் கடந்த 2011 ஆம் ஆண்டு மாணவன் ஒருவன் தாக்கப்பட்டமைக்கான வழக்கின் தீர்ப்பே இவ்வாறு இன்று வழங்கப்பட்டுள்ளது.  

2 comments:

Powered by Blogger.