Header Ads



24 போதைப்­பொருள் கடத்­தல்­கா­ரர்­களின், சொத்­துக்­களை அர­சு­டை­மை­யாக்க திட்டம்

இலங்­கைக்கு போதைப்­பொருள் கடத்தும் வலை­ய­மைப்­புக்­களின் தலை­வர்­க­ளான 24 போதைப்­பொருள் கடத்தல் மன்­னர்கள், போதைப்­பொருள் வர்த்­தகம் ஊடாக உழைத்­துள்ள சொத்­துக்­களை அர­சு­டை­மை­யாக்கும் விஷேட விசா­ர­ணைகள், சி.ஐ.டி. மற்றும் பி.என்.பி. என­ப்படும் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வி­னரின் ஒன்­றி­ணைந்த விசா­ரணைக் குழு­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார். நேற்று இடம்­பெற்ற விஷேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கும்­போது அவர் இதனைத் தெரி­வித்தார்.

அத்­துடன் நேற்று முன்­தினம் மாலை கைப்­பற்­றப்­பட்ட ஹெரோ­யி­னுடன் சேர்த்து நேற்று காலை 6.00 மணி வரை­யி­லான காலப்­ப­கு­திக்குள் 520 கிலோ 762 கிராம் ஹெரோயின் பொலி­ஸாரால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும் அது தொடர்பில் இக்­கா­லப்­ப­கு­திக்குள் நாட­ளா­விய ரீதியில் 6651 பேர் கைது செய்­யப்பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர சுட்­டிக்­காட்­டினார்.

இதன்­போது அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

“கடந்த  2018 இல் மட்டும் 732 கிலோ 129 கிராம் ஹெரோயின்  பொலி­ஸாரால் கைப்­பற்­றப்­பட்­டது.  அவை தொடர்பில் 40998 சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டனர். அதேபோல்  இவ்­வாண்டு அதா­வது, 2019 இப்­போது வரை (நேற்று) வரை 520 கிலோ  762  கிராம் ஹெரோயின் போதைப்­பொருள் மீட்­கப்­பட்­டுள்­ளது. அது தொடர்பில்  6651 கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

போதைப்­பொருள் ஒழிப்­புக்­காக நாம் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கின்றோம். சுற்­றி­வ­ளைப்­புக்கள், விசா­ர­ணைகள், நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள், புனர்­வாழ்வு நட­வ­டிக்­கைகள் என அந் நட­வ­டிக்­கைகள் நீண்­டது. தற்­போது இலங்­கைக்கு போதைப்­பொருள் கடத்தும் வலை­ய­மைப்­புக்­களைச் சேர்ந்த முக்­கி­யஸ்­தர்கள் 24 பேரின் சொத்­துக்­களை அர­சு­டை­மை­யாக்க விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன. குற்றப் புல­னாய்வுப் பிரிவு மற்றும் போதைப்­பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து இவற்றை முன்­னெ­டுக்­கின்­றன.

கைப்­பற்­றப்­படும் போதைப்­பொருள் அழிக்­கப்­ப­டு­வ­தில்­லை­யென  ஒரு தோற்­றப்­பாடு உள்­ளது. உண்­மையில் அவ்­வா­றில்லை. இந்த பாரிய தொகை போதைப்­பொ­ருட்கள் கடந்த 5 ஆண்­டு­க­ளுக்குள் பெரும்­பாலும் கைப்­பற்­றப்­பட்­ட­வையே.  அவை குறித்த வழக்கு விசா­ர­ணைகள் இன்னும் நிலு­வையில் உள்­ளன. வழக்­குகள் நிறை­வுறும் வரை வழக்குப் பொருட்­க­ளான போதைப் பொருட்­களை அழிக்க முடி­யாது. நீதி­மன்ற உத்­த­ரவின் பின்­ன­ரேயே அவை அழிக்­க­ப்படும். அண்­மையில் கொக்கெய்ன் அழிக்­கப்­பட்ட விவ­கா­ர­மா­னது அவ்­வ­ழக்கு முடி­வ­டைந்­தது. அதில் சந்­தேக நபர்கள் இருக்­க­வில்லை. அவை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டவை.

உண்மையில் போதைப்பொருளை அழிப்பது குறித்த நடவடிக்கையில் ஜனாதிபதியின் ஒத்துழைப்பு எமக்கு உள்ளது. எம்மை பொறுத்தவரை போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும். அப்போதே போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முடியும். என்றார்.

1 comment:

  1. அதேபோல் இலங்கை மத்திய வங்கியின் பாரிய பணத்தைக் கொள்ளையடிக்க சம்பந்தப்பட்ட அனைவரின் சொத்துக்களையும் அரசுடைமையாக்கி நாட்டின் மக்களால் சுமக்கமுடியாத கடன்சுமைகளை அவற்றைப் பயன்படுத்தி வௌிநாட்டுக்கடன்களைச் செலுத்துமாறு அரசாங்கத்தைக் கேட்கின்றோம். அதுமட்டுமன்றி பாராளுமன்றத்தில் அங்கத்தவர்களின் சொத்துக்களைச் சரியாக கணக்கிட்டு அவர்களின் சம்பளம் ஏனைய கொடுப்பனவுகள் தவிர்ந்து எஞ்சிய அத்தனை கோடி ரூபாக்களையும் உடனடியாக அரசுடைமையாக்கி நாட்டின் எல்லாக் கடன்களையும் மீளச் செலுத்தப் பயன்படுத்துமாறு நாம் அரசாங்கத்தைக் கேட்கின்றோம். நாட்டின் மக்களால் சுமக்கமுடியாத பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க அது ஒன்று தான் உடனடித்தீர்வு.

    ReplyDelete

Powered by Blogger.