தினமும் 2 மின்குமிழ்களை, அணைத்து விடுங்கள் - ரவி
தற்போதைய நிலையில் அவசர மின்சார கொள்வனவு மேற்கொள்ள வேண்டிய அவசியம் எழவில்லை. தினமும் இரு மின்குமிழ்களையாவது அணைத்து மின்சாரத்தை சேமிக்க முன்வருமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மின்சார சபை எதுல்கோட்டை கட்டமைப்பின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக சென்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது:
வரட்சியான காலநிலை காரணமாக மின்விநியோகம் தொடர்பில் சிக்கல் ஏற்படும் எனக் கருதினோம். அதற்காக அவசர மின்சார கொள்வனவு தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
பொதுமக்கள் தினமும் இரண்டு மின்குமிழ்களையாவது அணைத்து மின்சாரத்தை சேமித்தால் வருடாந்தம் 100 மெகாவோர்ட் மின்சாரத்தை சேமிக்க முடியும். அவ்வாறு சேமிக்க முடியுமானால் எமக்கு அவசர மின்சார கொள்வனவு செய்ய வேண்டிய தேவை ஏற்படாது.
தற்போதைய நிலையிலும் அவசர மின்சார கொள்வனவு செய்யத் தேவையில்லை.
2015 இல் அதிக மழை வீழ்ச்சி பதிவானது. அதிக மழை பெய்தால் அனல் மின்நிலையங்களை செயற்படுத்தத் தேவையில்லை. ஆனால் கடந்த 4,5 வருட காலத்தில் புதிய மின்உற்பத்தி நிலையங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. அதனாலே இவ்வாறு நஷ்டத்திற்கு முகங்கொடுக்க நேரிட்டது.
கேள்வி அதிகரிக்கையில் விநியோகம் நிலையாக இருக்க வேண்டும்.இன்றேல் தானாக பற்றாக்குறை ஏற்படும். இந்த பற்றாக்குறையை நிரப்புவதற்கு விலைகளை மட்டுப்படுத்தவும் தேவையற்ற கேள்வியை குறைக்கவும் வேண்டும்.
அனல் மின்நிலையம் வேண்டாம் என்று கூறுபவர்கள் கடந்த 11 வருடமாக ஏன் அதனை முன்னெடுத்தனர். குறைந்த விலையில் மின்உற்பத்தி செய்ய இதனை பயன்படுத்து கின்றனர் ஆனால் அவ்வாறு குறைந்த விலையில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாவிட்டால் மின்கட்டணம் உயரும்.இதற்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
அமைச்சர் அவர்களே! உங்கள் வீட்டு மாதாந்த மின்சார கட்டணம் எவ்வளவு என பொதுமக்களாகிய நாம் அறியஆவல். அதை தயவுசெய்து அறிவிப்பீர்களா? உங்களுடைய வீட்டில் உள்ள ஒரு குளிரூட்டிரயை ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் அணைத்து விட்டால் எங்களைப் போன்ற ஏழைகள் நூறுபேருடைய குடும்பத்தில் ஒருநாளைக்கு இரண்டு மின்குமிழிகளை இரு மணிநேரம் அணைக்கும் மின்சக்தியைச் சேமிக்கலாம். பயப்படவேண்டாம்.உங்களுக்கு பாதையில் செல்பவர்கள் கூட உங்களுக்கே தெரியாமல் பலகோடி ரூபாய்கள் செலவழித்து உங்கள் குடும்பத்துக்கு மாளிகை வாங்கித் தருவார்கள். ஆனால் எங்களைப் போன்ற ஏழைகள் மாதாந்த மின்கட்டணத்தைச் செலுத்த மாடாக உழைக்க வேண்டியிருக்கின்றது.
ReplyDeleteநல்லது ஆனால் ஆயிரம் பல்ப்ட மின்சாரம் களவில் போகிறது
ReplyDelete