Header Ads



இலங்கை முஸ்லிம்கள் இன்று, உணர்வற்ற சமூகமாக மாறிச் செல்கிறார்கள் - பேராசிரியர் MSM அஸ்லம்

- HAFEEZ -

இலங்கை முஸ்லிம்கள் இன்று ஒரு உணர்வற்ற சமூகமாக மாறிக்கொண்டு செல்கிறோம். நுகர்வோர் சமுகமாக அன்றி நாட்டுக்கு பங்களிப்புச் செய்யும் சமூகமாக மாறவேண்டும். அன்று எமது முதாதையர் அதனைச் செய்தனர். இது உடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சப்ரகமுவ பல்கலைக்கழக சுற்றுலா முகாமைத்துவ பீட பேராசிரியர் கலாநிதி எம்.எஸ்.எம்.அஸ்லம் தெரிவித்தார். (27.1.2019)

தேசிய ஒற்றுமைக்கும் அபிவிருத்திக்குமான புத்திஜீவிகள் சங்கம் கண்டியில் ஒழுங்கு செய்த கூட்டம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். மேற்படி சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி  எம்.ஏ.சீ.எம்.யாக்கூப் தலைமையில் நடந்த இக்கலந்துரையாடலில் அவர் மேலும் கூறியதாவது-

மகிழ்ச்சியான, அமைதியான வாழ்க்கையையே சகலரும் விரும்புவர். நிம்மதிக்கும் சந்தோசத்திற்கும் அடிப்படையான காரணிகளே மறுபுரமாக பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணியாக அமைந்து விடுகின்றன. எனவே மகிழ்ச்சி அமைதி என்பன உள்ள போது ஒன்றும் இல்லாத போது பிரிதொன்றுமாக  சகல சமூக செயற்பாடுகளையும்  வழி நடத்தும் அடிப்படையாக அவை உள்ளன. இவை எப்போது சீராக உள்ளனவோ அப்போது  ஒருசமுகம் ஆரோக்கியமான சமுகமாக இருக்கும். 

இன்று முழு உலகமும் ஒற்றுமை இன்மை தொடர்பாகவே தந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஒற்றுமை என்பதை அடைய முயற்சிக்கிறது. இன்று பொதுவாக  அடைய முடியாத ஒன்றுக்கு ஆசைப்படுவதாகவே பலர் கருதுவர். அதாவது சுபீட்சத்துக்காக முயற்சிக்கின்றனர். சுபீட்சத்தை அடைய முடியாமைக்கு   வறுமை காரணம் என நினைக்கின்றனர். உலகில் இன்று ஆன்மீகத்தின் வறுமையே காணப்படுகிறது. மனதில் மகிழ்ச்சியில்லை. வாழ வழி தெரியாது தத்தளிப்பதுதான் இன்றைய பிரச்சினை.

இன்று பொதுவாக நாலு விடயங்களின் அடிப்படையில் எம்மை நாம் வழி நடத்துகின்றோம்.  மேதைகள் மார்க்க அறிஞர்கள் போன்றோர் எமக்கு காட்டித் தந்த விடயங்கள், நாமே(எமது சமயம்) சிறந்த வர்கள், இறைவனின் (அல்லாஹ்வின் பொறுப்பில்) சகல காரியங்களையும் விட்டுக் கொடுத்து விட்டு மரணத்தின் பின் சுவர்க்கத்தை எதிர்பார்ப்பது, மரணத்தின் பின் நாம் செய்தவைகளுக்காக இறைவனின் தீர்ப்;பிற்கு ஆளாவது என்ற அடிப்படையில் பொதுவாக முஸ்லி;கள் தம்மை தாமே வழி நடத்திக் ;கொள்கின்றனர். 

இதில் சகலதுறைகளிலும் நாமே சிறந்தவர்; என்பதை எடுத்துக்கொண்டால் அதற்கு சார்பாக அல்லது எடுத்துக்காட்டாக நாம் வாழ வேண்டும். அதுதான் இதன் த்த்துவமாக இருக்க வேண்டும். உதாரணமாக வியாபாரமா? அதில் மிக நேர்மையாகச் நாம் செய்கிறவர்கள் என்பதை எடுத்துக்காட்டாக மாற்ற வேண்டும். அல்லது கொடுக்கள் வாங்கள் செய்கிறோமா அதிலும் நாம் மிக நேர்மையானவர்கள் என்பதை பிரதி பலிக்க வேண்டும். தான் எதைச் செய்தாலும் அதில் நாம் சிநந்தவர்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும். வெறும் போலியாக அல்ல. உண்மையாகவே காட்ட வேண்டும். அச்சமின்றி அல்லாவுடைய துணையுடன் வாழ்கிறோம் என்ற நிலை காணப்பட வேண்டும். இதனால் வீண் பயம் பீதி ஏற்படக்கூடாது. ஏமாற்று மோசடி ஏற்பட மாட்டாது.  மரணத்தின் பின் நியாயத் தீர்ப்புநாளில் நாம் பதில் சொல்லியாக வேண்டும். என்ற சிறப்புப் பண்புகளை கைக்கொள்ள வேண்டும்.   

இதுவே ஆரோக்கியமான சமூகத்தின் சிறப்பியல்புகள் வெளிப்படுத்தும் ஏதுக்களாக வரும். அதே நேரம் ஆரோக்கியமான சமூகத்தில் ஞானம் உள்ள மனிதர்கள் இருப்பார்கள். எந்த இடத்திற்கு எது பொருத்தம் எதை எப்போது செய்ய வேண்டும் என்ற சிந்தனை காணப்படும்.   

அடுத்ததாக நிலையான பொருளாதார அபிவிருத்தி இருக்க வேண்டும். ஸகாத் என்றும் ஏழை வரி என்றும் எவ்வளவு காலமாகக் கொடுத்தும் அது இன்னும் மாறவில்லை என்றால் அதன் அடிப்படையை தவறவிட்டுள்ளோம் என்பதே கருத்ததாகும். 

மேற்குலக நாடு;கள்கள் சமயத்திற்கு வெளியே சென்று அபிவிருத்தி பொருளாதாரத்தை கட்டி எழுப்புகிறார்கள். முஸ்லிம்கள் குர்ஆனிலிருந்து தூரமாகி வெளியே சென்றதால் வீழ்ச்சிப் பாதையில் செல்கின்று கொண்டிருக்கின்றனர். அன்று ஐரோப்பியர்கள் இருளில் இருந்த போது முஸ்லிம்கள் வெளிச்சத்தில் இருந்தார்கள். மேற்படி வரலாற்றறை நாம் கூறுகிறோமே தவிற அது பற்றி இன்று சிந்திப்பதில்லை. 

நாம் திருக்குர்ஆனின் வழிகாட்டலை தவறவிட்டு விட்டு மேற்பத்தியர்களை பின் பற்றுகிறோம். எமது முக்கிய கடமைகளில் ஒன்றாக பல்துலக்குதல் பட்டியலிடப்பட்டுள்ளது. மிஸ்வாக் என்ற பெயரில் அதைச் செய்கிறோம். அந்த வகையில் உலகத்திற்கு பல்துலக்குவதை சொல்லிக் கொடுத்தது முஸ்லிம்பளாகும். ஆனால் அவர்கள் அதனை மேம்படுத்தி 'பிரஸ்' என்றும் தூரிகை என்றும், பற்பசை என்றும் அமைத்துக் கொண்டாரகள். நாம் அதனை சரியாக பின்பற்றாது கைவிட்டு விட்டோம். 

எல்லோரது மனதையும் கவரும் வதித்தில் நாம் நடந்துகொள்ள வேண்டும். இது நடிப்பாக அல்ல. உண்மையான நடத்தையாக இருக்க வேண்டும். எமக்கு தொழில் துறை மனப்பாங்கு இல்லை. குழந்தைகளை நல்ல முறையில் ஆணுசரித்து உணவு வழங்கும் தன்மை தாய்மாரிடம் இல்லை. 

ஆரோக்கியமான சமூகத்தில் சரியாக சிந்தனை கொண்டவர்கள் உருவாக்கப்பட வேண்டும். உடை உணவு, போன்ற விடயங்களில் பொதுமக்களை கவரக்கூடிய விதத்தில் அமைத்துக்கொள்ள வேண்டும். அதாவது கவர்ச்சி காட்டுவது அல்ல. மார்க்க வரையரையில் இருப்பதுடன் மற்றவர் அருவருக்கத்ததக்கதாக இருக்கக் கூடாது.  சமூகத்தில் வறுமை ஒழிப்புத்திட்டம் இருக்க வேண்டும். இஸ்லாத்தில் உள்ள வறுமை ஒழிப்புக் கோட்பாடு போல் வேறு எதிலும் இல்லை என்பது அறிஞர்கள் ஏற்றுக் கொண்ட கருத்தாகும். ஆனால் இன்று அதனை கையேந்தும் சமூகமாக மாற்றி உள்ளோம். மேற்கூறிய பிரசசினைகளுக்கு தீர்வுகாணாது ஆரோக்கியமான சமூகம் ஒன்று உருவாகாது.

ஜூம்மாவிற்கு செல்வதற்கு பாதையில் வாகனத்தை நிறுத்த முடியாது. உணர்வற்ற ஒரு சமூகமாக மாறிக்கொண்டு போகிறோம். அனேகர் உணர்ச்pயற்றவர்களாக உள்ளனர். அவர்கள் மத்தியில் நல்லுணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். இராக்குகையில் நபி (ஸல்) அவர்கள் தியானத்தில் இருந்த காலம் எப்படியோ அப்படியான காலத்தில் நாம் வாழ்கிறோம். சிந்தனையற்றவர்களாக வாழ்கிறோம். நன்றிகெட்டவர்கள் என்ற பெயர் எடுத்துள்ளோம். ஆனால் நாம் அப்படிதயனவர்களா?
நாம் பிறந்தது அரச சைத்திய சாiiயில், படித்தது அரச பாடசாலையில். கையேந்தி வாழ்வது அரச சம்பளத்தில். ஆனால் இவைகளுக்கு நன்றி செலுத்தும் மக்களாக நாம் இல்லை. சுயநல சிந்தனை எம்மில் அதிகம் உண்டு. உதாரணமாக வெளிநாடுட்டு நிறுவனம் ஒன்று இலவசமாக  கிணறுகளை அமைத்துக் கொடுத்து வருகிறது. இது நல்ல வேலை. ஆகால் அவை அனைத்தும் முஸ்லிம் பிரதேசங்களிலே அமைக்கப்பட்டு வருகின்றன. ஏன் அதில் ஒரு சிலவற்றையாவது பிர சமூகங்களுக்கு அமைத்துக் கொடுக்கலாமே. 

நாம் தப்பாக கணக்கு போட்டு வாழும் ஒரு சமூகமாகி உள்ளோம். எல்லாவற்றிற்கும் ஒரு எடுகோளை வைத்துள்ளோம். உதாரணம்- பொது நிறுவனம் ஒன்றில் எமது வேலைகளைச் செய்யச் சென்றால் அவன் அப்படி, இப்படி, ஒன்றும் செய்ய மாட்டான். இலஞ்சம் கொடுத்தால்தான் செய்வான் என்ற எடுகோனை வைத்துக்கொண்டு தப்பான கணக்குப் போட்டு இலஞ்சம் வழங்குகிறோம். சட்டம், நிர்வாகம், நீதி, சேவை என அனைத்தும் இருக்க நாம் தப்பான கணக்கு போட்டு இலஞ்சம் வழங்குகிறோம். இதனால் பல பிரச்சினைகள் உருவாகின்றன.
  
அன்று தொட்டு இன்று வரை  முஸ்லிம் சமூகம் எவ்வாறு நாட்டிட்கு என்ன பங்களித்துள்ளது? என்பதை சற்று பார்ப்போம். விவசாயம், கைத் தொழில் துறையில் என்ன செய்துள்ளோம் என்று பாருங்கள்.  அன்று சிங்கள மன்னர் காலத்தில் நாட்டின் உணவுக் களஞ்சியமாக கிழக்கு மாகாணம் இருந்ததாக வரலாருகள் கூறுகின்றன. குறிப்பாக கஜழக்கு மாகாண முஸ்லிம்கள் அதனைச் செய்தனர்.  நதியோரங்களில் ஏன் முஸ்லிம் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன என்பது தெரியுமா பாதுகாப்பின் பங்களிப்பு காரணமாக அவர்கள் அவ்வாறுவைக்கப்பட்டார்கள். அதாவது நதிகளுக்கூடாக உள் வருவதைத் தடுக்க பாதுகாப்பிற்கு முஸ்லிம் சமூகம் நிறுத்தப்பட்டார்கள்.  

சுகாதார சேவையில் முஸ்லிட்கள் பங்களித்துள்ளனர். முஸ்லிம்கள் அன்று வைத்திய ரத்ன, வைத்திய முதியான்சே, வெதகெதர என்ற பெயர்களால் பலர்  பலர் அழைக்கப்பட்டதர்கள். இன்றும் அதே பரம்பரைப் பெயர்கள் உள்ளன. இன்று போல் அன்று மேலைத்தேய டாக்டர்கள் இருக்கவில்லை. எமது பாரம்hரிய வைத்தியர்களே அதனை ஈடுசெய்தனர். கல்வி, அரசியல் கட்டிட வடிவமைப்பு, சட்டத்துறை என்பவற்றறுக்கு பெரும் பங்களித்துள்ளனர்.

சர்வதேச உறவுகளில்  முஸ்லிம்களின்; பங்களிப்பு பாரியதாக இருந்தது. அன்று ஓன்றாக இருந்த இந்தியா சுதந்திரத்தின் பின் இரண்டாகப் பிரிந்தது. ஆனால் இலங்கையோ சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும்  ; ஒரே சமூகமாக மாகவே உள்ளது. அன்றைய எமது தலைவர்கள் நாட்டை கூறு போட்டு சுதந்தர வேட்கையை அடைந்துகொள்ள முயற்சிக்கவில்லை.  

அன்று தொட்டு இன்று வரை புலனாய்வுத்துறையில் முஸ்லிம்கள் இருந்து வருகின்றனர். ஆரோக்கியமாக சமூகத்தில் இவ்விடயங்கள் வளர்க்கப்பட வேண்டும்.

நுகர்வோர் சமுகமன்றி பங்களிப்புச் செய்யும் சமூகமாக மாறவேண்டும். அன்று எமது முதாதையர் அதனைச் செய்தனர். இதனால் எமது மூதாதையர்கள்  பாதுகாக்கப்பட்டனர். மற்றவர்களது கலாச்சாரங்களை மதிக்க வேண்டும். தெளிவாக கொள்கை இருக்க வேண்டும். வட்டி கூடாது என்கிறோம். அதனை வங்கிகள் மூலம் அன்றாடம் கையாள்கிறோம். வாகனங்களுக்கு பினான்ஸ் என்று வட்டியை தாளாரமாக கையாள்கிறோம். 

நாட்டுக்கு ஒரு நாம் ஒரு பெறுமதியைச் சேர்க்க வேண்டும். அதனால்தான் அன்று எமது முன்னோர்கள் மதிக்கப்பட்டார்கள் என்று குறிப்பிட்டார்.   

1 comment:

Powered by Blogger.