மஹிந்தவின் புதல்வரின் திருமணத்தில், ஐதேக Mp கள் பங்கேற்று ஆதரவாளர்களை இழிவுபடுத்திவிட்டனர்
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் ரோஹித்த ராஜபக்சவின் திருமண நிகழ்வில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றிருக்க கூடாது என ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அடிமட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களை இழிவுபடுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சாதாரண ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கடந்த ஒக்டோபர் 26 அரசியல் குழப்ப நிலைமைகளின் போது அலரி மாளிகையில் இரவு, பகல் பாராது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த அரசியல் குழப்ப நிலைமைகளை உருவாக்கியவர்களுடன் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது சாதாரண கட்சி உறுப்பினர்களை மலினப்படுத்தும் வகையிலானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும், இந்த நாட்டுக்கே பிரதமரான ரணில் விக்ரமசிங்க திருமண நிகழ்வில் பங்கேற்றதில் பிழை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய நிகழ்வில் பங்கேற்றதிலும் தவறு கிடையாது என்ற போதிலும் ஏனைய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றது அவர்களுக்காக போராடிய அடிமட்ட தொண்டர்களை உதாசீனம் செய்யும் வகையிலானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment