தேர்தல்கள் ஆணையாளர் MM முஹம்மட் செய்த நல்லகாரியம் - ஞானசாரரின் வாய் அடைக்கப்பட்டது
இந்த நாட்டில் முஸ்லிம்கள் நல்லவர்கள் என்பதை நிரூபிக்க பல மில்லியன் ரூபாய்களை செலவு செய்யத் தேவையில்லையெனவும், வாழ்வில் இஸ்லாத்தை சான்றுபகர்கின்றவர்கள் உருவாகினால் மாத்திரம் போதுமானது எனவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் அமைச்சின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.பீ.எம். அஷ்ரப் தெரிவித்தார்.
அதிகாரத்திலுள்ள முஸ்லிம்கள் நல்லவர்களாக இருப்பார்களாக இருந்தால், பரிசுப் பொருட்களை வழங்கவோ, மில்லியன் கணக்கில் பணத்தை செலவு செய்து வீடுகளைக் கட்டிக் கொடுக்கவோ தேவையிருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினர்.
எமது நாட்டில் கடந்த காலத்தில் ஞானசார தேரர், பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவையும் சம்பந்தப்படுத்தி முஸ்லிம் தீவிரவாதத்தைப் பற்றிப் பேசிய போது அப்போதைய தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்துக்கு ஊடாக, அந்தக் கருத்தை மறுத்துரைக்க இப்போதைய தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முஹம்மட் நளீமிக்கு முடியுமாக இருந்துள்ளது.
நளீமிய்யா உருவாக்கிய சிறந்த முன்மாதிரியை உயரிய பொறுப்பில் இருந்து கொண்டு வெளிப்படுத்த முடியுமாக இருந்ததனால்தான் ஞானசார தேரரின் கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்க முடிந்தது எனவும் அவர் விளக்கமளித்தார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்றுள்ள அஷ்ஷெய்க் எம்.எம். முஹம்மத் நளீமியை கௌரவிக்கும் நிகழ்வு (27) கஹட்டோவிட்டாவில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
Post a Comment