Header Ads



திருச்சியில் பிரமாண்ட இஜ்திமா - இலங்கையிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்பு -


திருச்சி அருகே லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்ற பிரமாண்ட மாநாடு சனிக்கிழமை  தொடங்கியது. இந்த இஜ்திமா திங்கட்கிழமை வரை நடைபெறுகிறது.இலங்கை, சவுதி அரபேபியா, மலேசிய, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான முஸ்லிம்கள் வந்து குவிந்தனர்.

முஸ்லிம்கள் மாநாட்டை (இஜ்திமா) இந்த ஆண்டு திருச்சி அருகே இனாம்குளத்தூரில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் பிரமுகர்கள் தலைமையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே தொடங்கின. 

இதற்காக திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டிபுதூரில் இருந்து இனாம்குளத்தூர் வரை லட்சக்கணக்கானோர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. வாகனங்கள் நிறுத்துவதற்கும் பல ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடு செய்யப்பட்டது. குடிநீர் வசதி, குளியல் அறை, உணவு, கழிவறை, தூங்குவதற்கான இடம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மாநாட்டு திடல் மற்றும் மக்கள் வந்து செல்லும் பகுதி முழுவதும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. இவை பார்ப்பதற்கு இரவை பகலாக்கும் வகையில் உள்ளது. 

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்தரபிரதேசம், தெலுங்கானா, டெல்லி, பீகார் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இலங்கை, சவுதி அரபேபியா, மலேசிய, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான முஸ்லிம்கள் வந்து குவிந்தனர்.

இதைத்தொடர்ந்து சனிக்கிழமை காலை பஜ்ரு தொழுகைக்கு பிறகு சிறப்பு துஆவுடன் இஜ்திமா மாநாடு தொடங்கியது. அதைத்தொடர்ந்து மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள் நடைபெற்றன.

இந்த மாநாடு இன்றும் (ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது.  (திங்கட்கிழமை) தொடர்ந்து நடக்கிறது. மாநாட்டில், இறைவன் கட்டளையை நிறைவேற்றி இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் (ஸல்) வாழ்க்கை முறையை பின்பற்றி அனைவரும் வாழ வேண்டும், மறுமை வாழ்வை நினைத்து அதற்கு தகுந்தாற்போல் எப்படி வாழ வேண்டும், சகோதரத்துவம், மனிதநேயம், மனிதாபிமானம், நல்லொழுக்கம், ஒற்றுமை, பிறருக்கு உதவும் மனப்பான்மை, அனாதைகளை ஆதரித்தல், ஏழை-எளியோருக்கு உதவுதல், மகளிருக்குரிய உரிமை மற்றும் சலுகைகளை இஸ்லாமியம் அருளியபடி முறையாக கொடுத்து அவர்களை கவுரவப்படுத்துவது, குழந்தை வளர்ப்பு முறை பற்றி போதித்தல், வணிகத்தில் நேர்மை, கொடுக்கல்-வாங்கலில் நேர்மை, மது இல்லா வாழ்வு, உயரிய பண்பாட்டோடு வாழ்வது, இழிவு பேசுவதை தவிர்த்து வாழ்வது குறித்து தினமும் சொற்பொழிவு நடைபெற்றது.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள புகழ்பெற்ற மார்க்க அறிஞர்கள் சொற்பொழிவு ஆற்றுகின்றனர். இதேபோல பஜ்ர், லுஹர், அஸர், மக்ரிப், இஷா ஆகிய 5 வேளை தொழுகையும் மாநாடு திடலில் நடைபெறுகிறது.

வளர்ந்து வரும் நாகரிக உலகில் பிரமாண்டமான முறையில் திருமணங்கள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கு மாறாக நபிவழி சுன்னத் என்பதன் அடிப்படையில் எளிமையான முறையில் ஞாயிற்றுக்கிழமை  எவ்வித ஆடம்பரமும் இன்றி எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.

மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வசதியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வட மற்றும் தென் மாநிலங்களில் இருந்து வரும் ரெயில்கள் இனாம்குளத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்வதால் ரெயில் மூலமும் அதிக அளவில் முஸ்லிம்கள் வந்தவண்ணம் உள்ளனர். மாநாட்டையொட்டி திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.வரதராஜூ தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

திருச்சி இஜ்திமாவில் ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்த  இலியாஸ்கான் என்ற முதியவர் இறந்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகர தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி காெளத்தூா் பொிய பள்ளிவாசல் கபா்ஸ்தானில் அடக்கம் செய்யப்பட்டது.இந்த நல்லடக்கத்தில் பலர் கலந்து கொண்டு அவருடைய மஃகாபிருத்துக்காக து ஆ செய்தார்கள்.இந்த திடலில் மருத்துவ துறை சார்பில் பல்வேறு மருத்தவர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த இஜ்திமா திங்கட்கிழமை இறுதியில் உலக நாடுகளில் அமைதி வருவதற்கும்மத நல்லிணக்க வளர வேண்டும் என்றும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்படுகிறது.

18 comments:

  1. Allahhu Akbar! AlHamdulillah! AlHamdulillah! Alhamdulillah

    ReplyDelete
  2. All credits go to Modi

    ReplyDelete
  3. At least it shows in Islamic spirit and yet, what do they going to achieve by this gathering of public? I think this is a waste of money in this difficult time for Muslim world.. Muslims do not have food to eat, cloths to wear, houses to live, 70 Millions Muslims are refugees and Millions of them do not have good. some eat leaves in Yemen. yet, this group of public have money to travel from all over the world to spend three days to talks..today, talks and bayans are at finger prints. how do we need go all the way to listen to this.. Is it not a waste of money.. If prophet alive with us, he would have laughed at this gathering.. While priority of Muslim world is gone ups and down.. Politicians waste billions of public money, now, so called Muslim groups waste money in this way.. while millions of Muslim dies out of poverty and starvation.. Long time ago, Indian Muslim used to send money and food Arabs in Gulf now... today, they need to do for Syria and Yemen instead of this gathering..

    ReplyDelete
  4. In my opinion, If Indian Muslim leaders invest in private school for Muslims, especially girls.. It would be great duty toward the society. At present Most of our girls are going to mixed schools and get in to hands of RSS racist and spoil their life.

    So it is an urgent work to be carried out by Muslim leaders, Businessmen, who really love to protect our culture and girls from the hands of Foxes.

    ReplyDelete
  5. Dear Brother Atteeq Abu,

    Don't try to show your dirty face. If your group doing, it is good. When others doing, waste of money.

    ReplyDelete
  6. Mr.atteeq abu...சகோதரரரே உங்களுக்கு common sense இல்லைையா.இவ்வாறான ஒன்றுகூடல்்கள் மூலம் மக்களின் அடிப்படை ஈமான் பாதுகாக்கப்படுுகின்றது.இதனாால் பலரது வாழ்வில் இஸ்லாமிய நெறிமுறைகள் பிரதிபலிக்கும்.உன்்னை திருத்்து உலகம் திருந்தும் என்பது போல தனிமனித சீராக்கமே இன்றய உலகின் தேவை.இதட்கான அடித்தளமிடும் முயட்சிகளில் ஒன்ரே இவ்வாறான ஒன்றுகூடல்கள்.இம்முயட்சியால் தனிமனிதர்கள் சீரானால் அவர்கள் தம்மால் முடிந்த பணிகளை சமூகத்துக்கு செய்வார்கள்.தப்லீக் இஜ்திமா என்பது வெறுமனே அந்த மூன்று நாள் பயான் நிகழ்வு மட்டுமல்ல.இந்த இஜ்திமாவின் பெயரால் பல இலட்சம் மக்கள் தனித்தனியாக சந்திக்கப்பட்டிருப்பார்கள்.இஜ்திமாவின் பின் பல்லாயிரம் மக்கள் மார்க்கத்தை கற்கவும் பின்பற்றவும் கற்றுக்கொடுக்கவும் அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளுக்கு சில நாட்கள் செலவிடுவார்கள்.இதனால் பல்லாயிரம் தனி நபர் குடும்ப சீராக்கங்கள் ஏட்படவுள்ளன.நீங்கள் நினைப்பது போன்று இது fivஏ star hotஏ l இல் நடக்கும் நிகழ்வல்ல ஆடம்பரத்தை பற்றி பேசுவதட்கு. அடிப்படை தேவைகளை நிறைவேற்ற மட்டுமே கேட்பது செய்யப்பட்டுள்ளது.வெயில் மழைக்கு ஒரு tஏ nt. மலசல கூட குளியல் வசதி அவ்வளவுதான்.உணவு கூட சொந்த செலவில் இலாப நோக்கற்று விட்பனை செய்யும் கடையில் வாங்க வேண்டும்.
    உங்கள் உதாரணம் எப்படியென்றால் வைத்தியர்களை வைத்திய சாலைகளை உருவாக்காமல் அப்பணத்தை ஏழை நோயாளிகளுக்கு உணவு உடை உறையுளுக்கு கொடுக்கலாமே என்பது போல.

    ReplyDelete
  7. The prophet mercy upon him did send public for dawa..it is like you sending a public man to treat serious sick person...can a man with medical skills treat a patient ?
    Noway; what about Islam. Any one can do it in the world today?
    This is not sunnah .
    The holy prophet elected most cleaner companions for dawa .
    معصب ابن عمير...معاذ and many others ..
    This is in name of Islam. They distort Islamic

    ReplyDelete
  8. The prophet mercy upon him did send public for dawa..it is like you sending a public man to treat serious sick person...can a man with medical skills treat a patient ?
    Noway; what about Islam. Any one can do it in the world today?
    This is not sunnah .
    The holy prophet elected most cleaner companions for dawa .
    معصب ابن عمير...معاذ and many others ..
    This is in name of Islam. They distort Islamic

    ReplyDelete
  9. Dear Mohamed .
    Any group does a wrong thing in Islam we must tell that ..
    I do not think they have any Islamic knowledge to teach others .
    They tell lies in the name of Islam .
    So many forge hadith; forged stories in the name of Islam .
    So many lies of miracles..
    They have freedom to do that ..
    But you see to teach Islam now in this modern world you must have some basic qualification.
    Allah will not accept lies in the name of Islam .
    They need to correct their text books; methods and priorities in dawa ..
    Today Islam is distorted not by enemies of Islam but by its own people.
    Allah knows .
    Who can speak for Islam?
    Public?
    Mullah?
    Miftis?
    Any one?
    Do you take medicine from a unqualified doctor?
    What about Islam.
    Din of Allah does not need qualified people to speak about it?
    Why do you belittle Din of Allah?
    But for medicines
    You seek qualified people ?
    But for din?
    You take it from Any one?
    Where is logic?
    Why do you look down on din of Allah?
    It's very cheap for you to hire cheap people.?
    Allah will ask you when you die about this
    He will ask why did you learn my din from unqualified people.?
    It is a sin as well?

    ReplyDelete
  10. Mr Anthony,

    It shows that it is not that far for Modi to get revert back to Islam. Not only Modi you too are now very close and pray Almighty Allah to guide you for the correct path.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. Dear unknown..actually u ar not known about islam according to your nick name implies...Don't u know the basic principles of dahwa...You no need to be a aalim or mufti to do the dawa..you can teach others whatever u know..
    e.g Adhan is a complete dawa (dahwathuth thamma) but u no need to be a aalim or mufti to make adhan..if u can recite it can do it...
    For ur example..Thre are some medicines are called "over the counter medication"(e.g Panadol). You can buy it from even a shop..no need to get it from a doctor because it is common well known drug. You no need to be a alim to call others towards basic things..you need expert advice on rulings and fatwas

    ReplyDelete
  13. Dear Unknown,
    your knowledge suit ur name. Dont u feel shame about not publishing even ur beautiful name, but talking about others.
    What is the qualification u r expecting to introduce Allah to the people?

    Before searching others faults, try to find yours nd correct. Then go to them nd tell in the correct way.

    ReplyDelete
  14. ஓர் முஸ்லிமுக்கும் அதல்லாதோருக்கும் இடையிலான வித்தியாசம் தொழுகையே.  தொழுகை இல்லாதவனுக்கு இஸ்லாத்தில் எவ்விதப் பங்கும் கிடையாது. 

    அவனுக்கு இஸ்லாத்தையோ முஸ்லிம்களையோ பற்றிப் பேச எவ்வித அருகதையும் கிடையாது.

    இவர்கள் அப்படியானவர்களை வீடு வீடாகச் சென்று அழைத்து வந்து ஈமானிய பயிற்சி கொடுத்து உண்மையான முஸ்லிம்களாக்குகின்றார்கள். 

    தவிரவும், அவ்வாறு முஸ்லிம்கள் ஆகின்றவர்களும்  தம் போன்றிருந்த ஏனைய தொழாதவர்களையும் பள்ளிவாசலுக்கு அழைத்து வந்து உதவ இஸ்லாமிய பயிற்சி பெறுகின்றார்கள்கள்.

    இந்த இஜ்திமாவில் இருந்தும் அவ்வாறு இஸ்லாமியப் பயிற்சி பெறும் அவர்கள் அப்பணியை உலகளாவிய ரீதியில் எடுத்துச் செல்வார்கள்.

    அசலில் அவர்கள் தம்மைப் சீர்திருத்திக் கொள்வதற்காகவுமே இவ்வாறு பெரும் பொருள் நேரச் செலவுகளை மேற்கொண்டு ஈடுபடுகிறார்கள்.

    ஓர் குறிப்பிட்ட எல்லைக்கப்பால் முஸ்லிம்களின் பின் ஏனையோர் விடயத்திலும் அவர்கள் தம் முயற்சியை மேற்கொள்வர்.

    காரணம், இஸ்லாம் அனைத்து மனிதர்களின் விமோசனத்துக்குமான வெற்றிகரமான நடைமுறை  மார்க்கம் என்பதோடு அனைவரையும் படைத்த ஏக இறைவனால் அருளப்பட்டதாகும்.

    இங்கு கருத்துக் கூறுபவர்கள், முதலில் முஸ்லிம் என்ற பெயரோடு தொழாமல் இருப்பவர்கள் யாரையாவது அறிந்தால்  இவர்களது கவனத்துக்குக் கொண்டு வரலாம். 

    அதன் பின் தாம் செய்ய நினைத்திருக்கும் சமூக நலப் பணிகளை அவர்களில் இருந்து தொடங்கலாம்.

    ஓர் குறிப்பிட்ட சிலரால் மாத்திரம் சமுதாயத்திலுள்ள சகல பிரச்சினைகளுக்கும் தீர்வை முன்வைத்து விட முடியாது அல்லவா. 

    எனவே, சமூகப் பணியைக் கூட்டுப் பொறுப்பாகக் கருதி தத்தம் சக்திக்கும் சந்தர்ப்பங்களும் ஏற்றவாறு ஒவ்வொருவரும்  தம்மாலான பணிகளை ஒற்றுமையாகப் புரியட்டும். 

    இன்றோ நாளையோ என்றிருக்கும் இவ்வுலக வாழ்விலும், அழிவும் முடிவும் இல்லாத அடுத்த வாழ்விலும் ஒவ்வொருவரும் மகத்தான வெற்றி பெற முயற்சி செய்வோமாக.

    எல்லாவற்றுக்கும் ஓர் முயற்சி தேவைப்படுவது போன்று சுவர்க்க வாழ்விற்கும் ஓர் முயற்சி தேவைப்படுகின்றது என்பதை அனைவரதும் உள்ளத்தில் இருத்திக் கொள்வோமாக..

    ReplyDelete
  15. They say “whatever RASOOL did is sunnath” Rasool never traveled by plane, used electrical items, ate buriani, gathered people for camping called Ijithima.

    ReplyDelete
  16. Mr athiq and unknown looks like intelligent!
    Millions of that Muslims in ijthima are foolish!
    Then what to say about our ulamas and mufthis there?
    They're from different groups who come and wish for
    Success to the whole Ummah.what about them?
    Mr athiq and unknown don't show you're naked to public!

    ReplyDelete
  17. Mr. Anthony.. ONE True God who created this Universe, Paradise, Hell and all that exist in Universe, You me and others...is calling you to worship him alone...

    But Most of you are worshipping, Fire, Stone, Idles, Dead people and Messengers of God and Mothers of Messangers. Remember all these are careations of God.. They are not be worshipped but respected only.

    Worship is only for the God who created you... If we do not worship this TRUE ONE GOD... He says, that he will throw us into the HELL. The Paradise is only for those who direct worship to This TRUE ONE God only.

    ISLAM is the only religion on earth today calling and directing people to worship THIS TRUE ONE GOD... All the other religions guide people to worship CREATIONS like Messengers (Jesus), His mother, Sun, Moon, Idle, Trees and Stones.. Seriously a great sin that will make not reach to paradise.

    So learn and turn to your God's religion before death...

    ReplyDelete
  18. @Ateek Abu, don't criticize the Thabligh Jamaath event with your one-sided favour to a certain Jamaath.
    Get rid of your pessimistic view.

    ReplyDelete

Powered by Blogger.