Header Ads



அநீதிகளைக் கிளர்ந்துவிடு, அப்பாவிகளை வெளியிலிடு


நீதியழிந்து வரும் நாடிதிலே
நிம்மதியற்ற இருப்புக்கள்!
நின்றாலும் குற்றம்!
இருந்தாலும் குற்றமென்று!!
அநீதியைக் கையிலெடுத்த
அகராயுதம்!
இன்னும் - அஸ்தமிக்கவில்லை!
வழியேறிய மண்புகளை
மகத்துவம் பாரா! 
மட்டற்ற பருவமொன்று மேலேற 
பதறியடித்து - எடுத்த படம்
பரிதாபமாய் ஆவதேனோ!
பக்குவமாய் செய்கின்ற
வேலையிது!
பகட்டுக்கும் பெயருக்கும்
பீத்துகையில்,
பகைவர் நம் முன்
படு கோபம் கொண்டுளாரல்லாவா!
வயது பாய்ந்த சிறு இன்பம்
அப்பாவிகளை - பாவியென்று
அநியாயமாய் அடைத்து வைத்து
அழிய வைக்கும் அரசா இது!
புராதனத்தை பூதகராமாக்கி
புது வடிவ சட்டம் கூறி
பதறப்பதற கதற வைக்கிறது
தப்பிப் பிழைத்த அரசு!
இது - இவ் அரசின்
இரண்டாவது காட்சி!!
ஆட்சிக்கு ஆணை கொடுத்து
ஆட்சித் தாகத்துக்கு 
முட்டும் கொடுத்து! 
வளரத்த கடா மேயுதிங்கே
நம் வீட்டு பயிர்களைத் தான்!
சொத்த உறங்க 
செத்த கிளிபோல்
கிடந்த தலைவருக்கு
ஆட்சி பிடிக்க
கோடு வரை – 
கோட்டுப் போட்ட
தலைவர் எங்கே!
வாக்குச் சொல்லி!
வாழ நமக்கு
இது தான் நல்லரசு என்ற
தலைவர் எங்கே!!
ஆடையென்றதும் 
ஆக்ரோசமாய்
பொங்கியெழுந்த
குரல்கள் எங்கே!
ஆ, ஊ, என்றால்;
அள்ளி விழுந்து
அறிக்கை விடும்
ஆசை மெழுகு பூண்ட
அரசியலாளர்கள் - எங்கே!
பாடு பார்த்து
திட்டித் தீர்க்கும்
எழுத்தாளும்
போராளிகள் - எங்கே!
ஏன் இப்போது மௌனம்!
ஆட்சியைக் காக்க
அன்று – கிளர்ந்த
ஆவேசம் இன்று எங்கே!
‘பேஸ்புக்’கில்
பேருக்கு பீத்துமொரு கூட்டம்!
நாடு பிரண்டாலும் - நம் தலைவனாலே!
காடு திரண்டாலும் - நம் தலைவனாலே!!
பெயரளவில் - கதையளக்காது,
அநியாயமாய் அடைபட்ட
அப்பாவி சகோதரங்களை
அவசரமாய் - வெளியிலெடும்
அதிசயத் - தலைமைகளே!

✍️ கியாஸ் ஏ. புஹாரி

#திட்டமிடப்பட்ட சதிக்கு #சிறையா!
அப்படியென்றால்,
#திட்டமிட்டு_செய்யப்பட்ட பள்ளிவாசல் உடைப்புகளுக்கு எவ் வகை #தண்டனை?
(சி.சி.ரீ. பதிவுகளும் இருந்தனவே!)
மனிதாபிமானமற்ற #அரசையா_ஆதரித்தார்கள் நம் #தலைவர்கள்...


No comments

Powered by Blogger.