Header Ads



இலங்கையில் வட்ஸப் - வைபர், ஊடகங்கள் ஒட்டுக்கேட்கப்படுகிறதா..?

பிரபல சமூக ஊடக தொலைதொடர்பு செயலிகளான வாட்ஸ் அப் மற்றும் வைபர் ஆகியவற்றின் ஊடாக மேற்கொள்ளப்படும் உரையாடல்களை ஒட்டுக் கேட்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகிய செயலிகளைக் கொண்டு மேற்கொள்ளப்படும் தொடர்பாடல்களை ஒட்டுக் கேட்க கூடிய கருவிகளை தருவிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வாட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகியனவற்றின் ஊடான தொடர்பாடல்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய ஜாமர்களை கொள்வனவு செய்யவும் சட்டம் ஒழுங்கு அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்த கருவிகள் கொள்வனவு செய்யப்படவிருந்ததாகவும் அரசியல் குழப்ப நிலைமைகளின் பின்னர் மீளவும் இந்தக் கருவிகள் கொள்வனவு செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக களமிறக்குவதற்கான வியூகம் வகுக்கப்பட்ட போது முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் நல்லாட்சி ஆதரவ செயற்பாட்டாளர்கள் வைபர் தொழில்நுட்பத்தின் ஊடாகவே தொடர்பாடல் மேற்கொண்டிருந்தனர் என்பதனை தேர்தல் வெற்றியின் பின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.