Header Ads



இந்து சம்மேளனம் ஞானசாரரை விடுவிக்குமாறு, கோருவது சிறுபான்மையினரை கொச்சைப்படுத்துவதாகும்

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி இலங்கை இந்து சம்மேளனம் கூறுவது ஒட்டுமொத்த சிறுபான்மையினரையும் கொச்சைப்படுத்தும் செயலாகும் என சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள் தெரிவித்துள்ளார்

நேற்றைய தினம் கொழும்பில் ஜனாதிபதியிடம் ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கு இலங்கை இந்து சம்மேளனத்தினர் கோரியிருந்த நிலையில் சிறி தமிழீழ விடுதலை இயக்கத்தின் (சிறிரெலோ) செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

மேலும் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாதாவது,

கடந்த காலங்களில் ஞானசார தேரரின் செயற்பாடானது சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் இருந்ததுடன், அமைச்சர் மனோகணேசனின் அமைச்சுக்குள் சென்று அமைச்சரையும் சிறுபான்மை இனத்தினரையும் அச்சுறுத்துவது போல் செயற்பட்டிருந்தார்.

அதே போன்று கடந்த சில நாட்களுக்கு முன் மட்டக்களப்பில் உள்ள தேரர் ஒருவர் ஒட்டுமொத்த தமிழர்களையும், விடுதலை போராளிகளையும், அரச உத்தியோகத்தர்களையும் அச்சுறுத்தியிருந்தார். குறித்த தேரருக்கு ஆதரவாக கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு படையெடுத்து சென்ற ஞானசார தேரர், அத்தேரருக்கு ஆதரவாக செயற்பட்டிருந்தார்

எனவே இவ்வாறான தேரரை விடுவிக்க கோரி இலங்கை இந்து சம்மேளனம் கோருவது வேதனைக்குறிய விடயம் என்பதுடன், நீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கூறியும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக ஜனாதிபதியிடம் எந்த அழுத்தத்தையும் கொடுக்காத இலங்கை இந்து சம்மேளனம் ஞானசாரரின் விடுதலைக்கு குரல் கொடுப்பது என்பது எமக்குள் இருக்கும் ஒற்றுமையை நாமே சீரழிப்பது போல் உள்ளது 

தமிழர்களுக்கு நடக்கும் அநீதிகளை தட்டி கேட்க யாரும் இல்லாத நிலையில், வெடுக்குநாரி சிவன் கோவிலுக்கு மக்கள் சென்று வழிபாடு நடத்த தடுத்து நிறுத்தியும், அதேவேளை முல்லை செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் அத்துமீறி புத்தர்சிலை வைத்ததிற்கும் இதே இந்து சம்மேளனம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற கேள்வியையும் சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தனது ஊடக அறிக்கையில் கேள்வியையும் எழுப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. Hindu Federation is a movement run by some fools and supported by chauvinists to stand with chauvinism. It will never raise voice for minorities.

    ReplyDelete
  2. சரியான கேள்வி,

    ReplyDelete
  3. சிறப்பான பதிவு... இந்து சம்மேளனத்தின் கையாலாகாத தனம் தான் இது... அவன் வந்த்தால் முஸ்லிம்களை அழிக்கலாம் என்ற நினைப்பு தான்... மற்றவனை அழித்து தான் நமது மதத்தை வழக்கணும் எண்டு இல்லை நம் சகோதர இனமே... உன் மதத்தில் நம்பிக்கை வை... நான்கு வேதங்களையும் படி.. அதில் கூறுவத்கென்ன.?
    "na tasya pratima asti
    "There is no image of Him."
    [Yajurveda 32:3]5

    "shudhama poapvidham"
    "He is bodyless and pure."
    [Yajurveda 40:8]6

    "Andhatama pravishanti ye asambhuti mupaste"
    "They enter darkness, those who worship the natural elements" (Air, Water, Fire, etc.). "They sink deeper in darkness, those who worship sambhuti."
    [Yajurveda 40:9]7

    Sambhuti means created things, for example table, chair, idol, etc.

    The Yajurveda contains the following prayer:
    "Lead us to the good path and remove the sin that makes us stray and wander."
    [Yajurveda 40:16]8

    ReplyDelete
  4. Well said.. But Some Hindu do not know their address and support blindly to BBS

    ReplyDelete

Powered by Blogger.