"முஸ்லிம்களை தேச துரோகிகளாக, சித்தரிக்க முயற்சி"
இன்று எமது நாட்டின் ஆட்சியை தீர்மானிக்கும் பிரதான சக்தியாக இனவாதம் காணப்படுகின்றது என்பது கசப்பான உண்மையாகும். இதுவே கடந்த காலங்களிலும் நடந்தேறின என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த அடிப்படையில் அண்மைக்காலமாக நாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்கள் இலங்கை முஸ்லிம்களை இனரீதியாக சீண்டக் கூடியதாகவே இருக்கின்றன.
மாவனல்லை சிலை விவகாரம், கிழக்கு மாகாண ஆளுணர் பதவி, புத்தளம் வெடி பொருட்கள் மீட்பு என கட்டவிழ்கப்பட்ட இனவாதம், தற்போது பௌதர்களின் அடையாளச் சின்னம் என தூபியை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவேற்றிய குற்றச் சாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு பதிவேற்றிய புகைப்படங்களை ஆதாரமாக வைத்து கைது செய்யப்பட்ட இவர்கள் வேண்டுமென்றோ அல்லது ஒரு மதத்தை அவமதிக்கும் நோக்கிலோ இதனை செய்யவில்லை என்பது நிச்சயம். எனினும் இன்றைய ஊடகங்கள் முற்றிலும் மாற்றமாக இதனை மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டும் விதமாக செய்திகளை பரப்பி வருகின்றன.
உண்மையில் இது இனரீதியாக பார்க்கப்பட வேண்டிய பிரச்சிணையா? என்றால், நிச்சயமாக கிடையாது. இது ஒரு அறியாமல் செய்த தவறே அன்றி வேண்டுமென்றே செய்த காரியமும் இல்லை. உண்மையிலே அது தவறுதான் என்றால், அதே சமூக வலைத்தளங்களில் பகிரங்கமாக மன்னிப்பு கோருவதன் மூலம் சுமுகமாக முடிவடையக் கூடிய பிரச்சிணை இன்று பூதாகரமாக்கப்பட்டுள்ளது என்றால் இது ஒரு திட்டமிடப்பட்ட சதியே அன்றி வேறில்லை.
தமது பொறுப்புக்களை சரியாக செய்ய வேண்டிய ஊடகங்களும் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் ஒருபக்கம் சார்ந்திருப்பது வேதனைக்குறிய விடயமாகும். மேலும் ஒருசில பெரும்பான்மை இன அரசியல்வாதிகளும் இப்பிரச்சிணைகளை ஒன்றிணைத்து முஸ்லிம்களை தேச துரோகிகளாக சித்தரிக்க முற்படுகின்றனர். தமது பதவிகளை காப்பாற்றிக்கொள்ள போராடிய நமது தலைமைகள் இவ்வாறான பிரச்சிணைகளுக்கு குரல் கொடுக்காமல் இருப்பது வேதனைக்குறிய விடயமாகும்.
எனவே இது தொடர்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் தலைமைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து குறித்த மாணவர்களின் எதிர்காலத்துக்காக சிறந்த தீர்வினை பெற்றுக் கொடுக்க முன்வருமாறு முஸ்லிம் சமூகம் சார்பாக உருக்கமாக வேண்டிக் கொள்கிறோம்.
Bishrul Hafy M. Farsan
Wrong is wrong cab not justify.
ReplyDelete