Header Ads



மாவனெல்ல - புத்தளம் விவகாரங்கள் பற்றி, உண்மைகளை வெளியிட முஸ்லிம் தரப்பு கோரிக்கை


- AAM. Anzir-

மாவனெல்ல சிலை உடைப்பு, புத்தளத்தில் வெடி பொருட்கள் மீட்பு விவகாரங்களில் உண்மைகளை வெளியிடுமாறு, முஸ்லிம் தரப்பினர் பாதுகாப்பு அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக நம்பகரமன வட்டாரங்களிலிருந்து Jaffna Muslim இணையத்திற்கு அறிய வருகிறது.

பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற முக்கியத்துவமிக்க கலந்துரையாடலின் போதே, இந்த வேண்டுகோளை முஸ்லிம் தரப்பினர் விடுத்துள்ளனர்.

பொலிஸ்மா அதிபர், முப்படை அதிகாரிகள், மாவனெல்ல மற்றும் புத்தளம் பற்றிய விவகாரங்களை கையாளும் புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

முஸ்லிம்கள் தரப்பில் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி, முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன், ஐனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மற்றும் ஹில்மி அஹ்மட் ஆகியோர் பங்கேற்றனர்.

வன்முறை கலந்த அல்லது பாரதூரமான சம்பவங்கள் நடைபெறும் போது, அதுபற்றி காவல்துறை உடனடியாக அறிக்கை வெளியி யிட்டால்  பல்லின மக்கள் வாழும், இலங்கை போன்ற நாட்டில் மக்களுக்கு தெளிவும், நம்பிக்கையும் ஏற்படும்.

அத்துடன் பெரும்பான்மை சிங்கள மக்களும், அவை சார்பு ஊடகங்களுக்கும் விளக்கம் கிடைக்கும்.  இதனால் முஸ்லிம்களை சந்தேகக் கண்கொண்டு நோக்குவது தவிர்க்கப்படும்.

உண்மையான தகவல்கள் வெளிவருவதில் தாமதம் ஏற்படுகின்றபோது, வதந்திகள் பரவி அது குழப்பகர நிலையை ஏற்படுத்துமெனவும் முஸ்லிம் தரப்பினர் பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

முஸ்லிம் தரப்பினரின் கோரிக்கைகளை நன்கு செவிமடுத்த பாதுகாப்பு தரப்பினர், இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.