பௌத்த புனித பிரதேசங்களில், மும்மொழிகளிலும் அறிவித்தல்களை தொங்கவிடுங்கள் - முஸ்லிம் கவுன்சில்
பௌத்தர்கள் புனிதமாக கருதும் பிரதேசங்களில், மும்மொழிகளிலும் அறிவித்தல் பலகைகளை வைக்குமாறு, முஸ்லிம் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் தற்போது சிறுபான்மை சமூகத்தினர் பௌத்த புனிதப் பிரதேசங்களை மதிப்பதில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ள நிலையில், பௌத்த புனித பிரதேசங்களில் மும்மொழிகளிலும் அறிவித்தல்களை தொங்கவிடின், இவ்வாறான சிக்கல்களை முடிவுக்கு கொண்டு வரலமென முஸ்லிம் கவுன்சில் சுட்டிக்காட்டியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சில் நடந்த கலந்துரையாடலின் போதே, என்.எம். அமீன் இதனை உரிய அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மதிப்புக்குரிய அமீன் சார் அவர்களுக்கு, பல்வேறுபட்ட கோணங்களில் சமூகத்துக்காக நீங்கள் மேட்கொள்ளும் முயறசிகளுக்கு எனது நன்றிகள் உரித்தாகட்டும். நீங்கள் கூறியது போல அறிவித்தல் பலகைகள் எல்லா மதத்தவர்களினதும் புனித தளங்களில் வைக்கப்பட்டால் மிகவும் நல்லதாக இருக்கும் அதேபோல அந்த இடங்களும் புனிதமாகவும், அதற்குரிய மரியாதையுடனும் பாதுகாப்பதால் வேண்டும்.
ReplyDelete