அரசியல்வாதிகள் நாட்டை ஆட்சி, செய்வதை கைவிட்டு நடிக்கின்றனர்
பல்வேறு தரப்பினர் தமக்குரிய பொறுப்புகளுக்கு புறம்பாக வேறு துறைகள் குறித்து கவனம் செலுத்துவதன் காரணமாக நாட்டில் நெருக்கடிகள் அதிகரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல்வாதிகள் தற்போது நாட்டை ஆட்சி செய்வதை கைவிட்டு, நடிக்கின்றனர், பாட்டு பாடுகின்றனர்.
நோயாளிகள் மரிக்கின்றனர், வைத்தியசாலையில் குறைப்பாடுகள் இருக்கின்றன. மருத்துவர்கள் இவை பற்றி கவனம் செலுத்தாமல், சிங்கப்பூர் உடன்படிக்கை பற்றி பேசுகின்றனர்.
பல்லைக்கழகத்தில் பல குறைப்பாடுகள் இருக்கும் போது பல்லைக்கழக மாணவர் தாம் சம்பந்தப்படாத வேறு விடயங்கள் பற்றி பேசுகின்றனர். சில பௌத்த பிக்குமார் பௌத்த மதத்தை வளர்ப்பதில் ஈடுபடுவதில்லை.
ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறி பாடசாலைகளுக்கு மாணவர்களை கொண்டு வர முடியாதுள்ளது.
கூறுவதற்கு வருத்தமாக உள்ளது. சில பௌத்த பிக்குமார் சமய விவகாரங்களை ஒதுக்கிவிட்டு, அரசியலமைப்பு மற்றும் சிங்கப்பூர் உடன்படிக்கை பற்றி பேசுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment