Header Ads



மேற்கத்திய கலாசாரத்தில் மூழ்கியவர் இன்று, ஹிஜாபுடன் தற்காப்புக் கலையில் கலக்குகிறார்

-By Ahsan Afthar -

பெண்­க­ளு­டைய வேலைத்­த­ளங்கள் மற்றும் அவர்கள் வெளிச்­செல்லும் இடங்­களில் பல்­வேறு சவால்­களை எதிர்­நோக்க வேண்­டி­யுள்­ளது. அதில் முதன்­மை­யா­ன­துதான் ஆண்­க­ளு­டைய ஆதிக்கம் ஆகும். பெண்கள் தம்மைப் பாது­காத்துக் கொள்­வ­தற்­காக வேண்டி தற்­காப்புக் கலையை பயி­ல­வேண்டும் என்ற நோக்­கத்தில் ஐக்­கிய இராச்­சி­யத்தைச் சேர்ந்த கதீஜா ஸபாரி என்ற சகோ­தரி ஒரு தற்­காப்­புக்­கலைப் பள்­ளியை தனது கண­வ­ருடன் இணைந்து நடாத்தி வரு­கிறார்.

தற்­காப்புக் கலையை பெண்­க­ளுக்கு, அதிலும் குறிப்­பாக முஸ்லிம் பெண்­க­ளுக்கு கற்­றுக்­கொ­டுத்து தற்­காப்­புக்­கலை பயிற்றுவிப்பாளர்களை உரு­வாக்­கு­வதே இவ­ரு­டைய நோக்­க­மாகும். 36 வய­து­டைய இவர் 4 பிள்­ளை­களின் தாய் ஆவார். இவர் ஹிஜாப் அணி­கிறார்.

முஸ்லிம் பெண்கள் தற்­காப்புக் கலையில் மிளிர வேண்டும் என்ற எண்­ணத்தை விட பெண்கள் பொது இடங்­களில் தம்மைப் பாது­காத்­துக்­கொள்ள ஒரு யுக்­தியை தெரிந்து வைத்­தி­ருக்க வேண்டும் என்­பதே இவ­ரது நோக்­க­மாகும். ஹிஜாப் அணிந்த பெண்கள் எதிர்­நோக்­கு­கின்ற பிரச்­சி­னை­களை முறை­யாக எதிர்­கொள்­ளவும் இஸ்­லாத்­துக்கு எதி­ரான வன்­முறை மற்றும் வெறுப்புப் பேச்­சுக்­களை தகர்த்­தெ­றி­யவும் தற்­காப்­புக்­கலை அவ­சியம் என சபாரி வாதி­டு­கிறார்.

இஸ்­லாத்தைப் பொறுத்­த­வ­ரையில் நான்கு முக்­கிய விளை­யாட்­டுக்கள் ஹதீஸ்­களில் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. நீச்சல், வில்­வித்தை, குதிரை ஏற்றம் மற்றும் தற்­காப்­புக்­கலை என்­ப­னவே அவை­யாகும்.

இவர் ஆரம்ப காலங்­களில் தற்­காப்புக் கலைப்­ப­யிற்­சியை ஆண்­க­ளுக்கும் பெண்­க­ளுக்கும் ஒன்­றா­கவே கற்­றுக்­கொ­டுத்தார். இவர் 2009 ற்கு முற்­பட்ட காலப்­ப­கு­தியில் சம­யத்தின் மீது நம்­பிக்கை கொண்­டி­ருக்­க­வில்லை. இஸ்லாம் பற்­றியும் சம­யங்கள் பற்­றியும் எதிர்­ம­றை­யான கருத்­துக்­களே தற்­காப்புக் கலை பயிற்­று­விப்­பா­ள­ரான ஸபா­ரிக்கு காணப்­பட்­டது. லண்­டனில் ஒரு மாண­வி­யாக இருந்த போது மேற்­கத்­தேய கலா­சா­ரங்­க­ளையே பின்­பற்­றினார்.

இஸ்­லாத்­துக்குள் நுழை­வ­தற்கு முன்னர் லண்­டனில் பல்­வேறு தரப்­பி­னரைச் சந்­தித்து உலகின் சம­யங்கள் பற்­றிய ஆய்வை மேற்­கொண்டார். சம­யங்கள் பற்­றிய ஆய்வின் போதும் கூட இஸ்லாம் பற்­றிய நல்ல கருத்­துக்கள் ஸபா­ரிக்கு கிடைக்­க­வில்லை. ஊட­கங்­களில் இருந்து எதிர்­ம­றை­யான கருத்­துக்­களே கிடைத்­தன. சமயம் மனி­தனின் சுதந்­தி­ரத்தை கட்­டுப்­ப­டுத்­து­கி­றது என்றும் போருக்கு வழி­வ­குக்­கின்­றது என்ற கருத்­துடன் இவர் இருந்­த­தோடு ஹிஜாபின் மூலம் இஸ்லாம் பெண்­களை கட்­டுப்­ப­டுத்­து­கி­றது என்றும் எண்­ணி­யி­ருந்தார்.

பல்­க­லைக்­க­ழ­கத்தில் படிக்­கும்­போதே அவ­ருக்கு இஸ்­லாத்தைப் புரிந்து கொள்ளும் பாக்­கி­யத்தை அல்லாஹ் அரு­ளினான். பல்­க­லைக்­க­ழ­கத்தில் இருந்த மாண­வி­களுள் பலர் முஸ்­லிம்­க­ளாக இருந்­தனர். ஒரு நாள் ஸபா­ரி­யு­டைய முஸ்லிம் தோழி ஒருவர் குர்ஆன் பிர­தி­யொன்றை அவ­ருக்கு பரி­சாக வழங்­கினார்.

குர்­ஆனை வாசிக்கத் தொடங்­கிய பின்னர் ஸபா­ரியின் மன­துக்குள் கொஞ்சம் கொஞ்­ச­மாக கடவுள் நம்­பிக்கை பிறந்­தது. இஸ்­லாத்­துக்கு எதி­ராக தான் கேள்­விப்­பட்ட அத்­தனை விட­யங்­க­ளையும் குர்ஆன் பொய்­யாக்­கி­யது. போர், ஜிஹாத் என பல விட­யங்­களில் அவ­ருக்கு தெளிவு கிடைத்­தது. காலப்­போக்கில் இஸ்­லாத்தின் மீது அதீத விருப்பம் ஸபா­ரிக்கு ஏற்­பட்­டதைத் தொடர்ந்து அவர் இஸ்­லாத்­துக்குள் நுழைந்தார்.

இஸ்­லாத்­துக்குள் நுழைந்த பின்னர், தான் கற்­றுக்­கொண்ட குத்­துச்­சண்டை, தற்­காப்புக் கலை என்­ப­வற்றை முஸ்லிம் பெண்­க­ளுக்குக் கற்­றுக்­கொ­டுத்து தற்­காப்புக் கலை பயிற்­று­விப்­பா­ளர்­களை உரு­வாக்க வேண்டும் என்­பதை இலட்­சி­ய­மாகக் கொண்டு அதனைச் செயற்­ப­டுத்­தியும் வரு­கிறார்.

ஸபாரி ஒரு நாளைக்கு 3 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு மேல் குத்­துச்­சண்டைப் பயிற்­சி­யினை மேற்­கொள்வார். குத்­துச்­சண்­டையில் கறுப்புப் பட்­டி­யி­னையும் இவர் வென்­றுள்ளார். தற்­போது முஸ்லிம் பெண்­க­ளுக்கு மாத்­தி­ர­மின்றி முஸ்­லி­மல்­லாத பெண்­க­ளுக்கும் இவர் பயிற்­று­விக்­கிறார்.

தேசிய அங்­கீ­காரம் பெற்ற குத்­துச்­சண்டை வீரர்­களுள் ஒரு­வ­ரான கரீம் என்­ப­வரை இவர் விவாகம் செய்­துள்ளார். சகோ­தரி ஸபாரி இஸ்­லாத்தை ஏற்க முன்னர் பயிற்­று­வித்த ஆண்­களை தற்­போது ஸபா­ரி­யு­டைய கண­வர்தான் பயிற்­று­விக்­கிறார். தற்­போது இரு­வரும் ஆண்­க­ளுக்கு வேறா­கவும் பெண்­க­ளுக்கு வேறா­கவும் பயிற்­சி­களை வழங்­கு­கின்­றனர். மேலும் ஆண்­க­ளுக்கு வேறா­கவும் பெண்­க­ளுக்கு வேறா­கவும் உடற்­ப­யிற்சிக் கூடங்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

எல்லா சந்­தர்ப்­பங்­க­ளிலும் ஆண்­க­ளையும் பெண்­க­ளையும் வேறு வேறாகக் கையாள்­வது கடி­ன­மான காரியம். ஆனாலும் இஸ்லாம் அத­னையே வலி­யு­றுத்­து­கி­றது. குத்­துச்­சண்டை என்­பது ஒரு விளை­யாட்டு. இதன்­போது ஒரு­வ­ருக்­கொ­ருவர் கட்­டித்­த­ழுவ வேண்­டிய நிலை ஏற்­படும். இவ்­வா­றா­ன­தொரு சந்­தர்ப்­பத்தில் ஆண், பெண் கலப்பு காணப்­ப­டு­வது நிச்­சயம் பித்­னா­வுக்கு வழி­வ­குக்கும். எனவே இரு சாரா­ரையும் வெவ்­வே­றாக்­கு­வதே சாலச்­சி­றந்­தது.

கரீம் மற்றும் ஸபா­ரி­யு­டைய இந்தத் திட்­டங்­க­ளுக்கு பெரும்­பான்மை சமூ­கத்தில் இருந்து எதிர்ப்­பு­களே கிளம்­பின. சமூ­கத்தில் இருந்து ஒரு­வரை ஒருவர் பிரித்து நோக்­கு­வதை இஸ்லாம் விரும்­பு­கி­றது என்ற விமர்­ச­னங்கள் எழுந்­தன. ஆனால் இதற்­கெல்லாம் ஸபாரி பதில் கூறினார். இஸ்லாம் யாரையும் பிரித்து நோக்­க­வில்லை. அதற்கு மாற்­ற­மாக முஸ்லிம் பெண்­களை முஸ்­லி­மல்­லாத பெண்­க­ளுடன் இணைக்கும் நற்­ப­ணி­யையே செய்து வரு­கி­றது.

சமூ­கத்தில் முஸ்­லிம்கள் அழ­கிய முறையில் நிம்­ம­தி­யாக வாழ வேண்டும். இன­வா­த­மற்ற, பித்னா அற்ற நிம்­ம­தி­யான முறையில் இந்த பயிற்சி நெறி­களை வழங்கி பயிற்­சி­யா­ளர்­களை உரு­வாக்­கு­வ­தென்­பது இம்­மு­றையில் நூறு சத­வீதம் சாத்­தி­யப்­ப­டு­கி­றது.

ஸபா­ரி­யு­டைய பெண்­க­ளுக்­கான தற்­காப்புக் கலைப்­பள்­ளியில் அனை­வ­ருக்கும் சம­மான இடம் உண்டு. அங்கே பிரி­வி­னைகள் இல்லை. பயிற்சிப் பட்­ட­றைக்குள் சென்­ற­வுடன் முஸ்லிம் பெண்கள் ஹிஜாபை அகற்றி விடு­வார்கள். இதன்­போது முஸ்லிம் பெண்­க­ளுக்கும் முஸ்­லி­மல்­லாத பெண்­க­ளுக்கும் எந்­த­வித வேறு­பாடும் தென்­ப­டாது. பெண்­க­ளுக்­கான குத்­துச்­சண்டைப் போட்­டி­க­ளின்­போது நடு­வர்கள், காவ­லர்கள் என சக­லரும் பெண்­களில் இருந்தே நிய­மிக்­கப்­ப­டுவர். பெண்கள் பயிற்சி பெறும் இடத்­தையோ அல்­லது பெண்­க­ளுக்­கான போட்டி நடை­பெறும் இடங்­க­ளையோ ஆண்­களால் பார்க்­கவே முடி­யாது.

மேற்­கத்­தேய நாடு­களில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வெளியில் செல்லும் போது கேலிக்­குள்­ளா­கின்­றார்கள். சில சந்­தர்ப்­பங்­களில் வன்­மு­றை­களைக் கூட எதிர்­கொள்­கின்­றார்கள். இந்­நே­ரத்தில் தற்­காப்புக் கலை என்­பது நிச்­ச­ய­மாக உத­வி­யாக  இருக்கும் என்­பதே ஸபா­ரி­யி­னு­டைய கருத்து.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வெறுப்புப் பேச்சு அல்­லது இஸ்­லாத்­துக்கு எதி­ரான வன்­மு­றைகள் நிக­ழும்­போது பெண்கள் யாரும் வெளியில் போக­வேண்டாம் என்­கிற பீதி வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. பெண்கள் வெளிச்­செல்ல அச்சம் கொள்­கி­றார்கள். ஆனால் ஸபாரி இந்த பயத்தை வெல்­ல­வேண்டும் என்ற கருத்­துடன் இருக்­கிறார்.

சகோ­தரி ஸபாரி இன­வாதத் தாக்­கு­தல்­களை சந்­தித்­த­தில்லை. இருந்த போதிலும் ஒரு முறை பாதையில் ஹிஜா­புடன் செல்லும் போது ‘உன்­னு­டைய நாட்­டுக்கு திரும்பிப் போ’  என்ற தொனியில் கெட்ட வார்த்­தைகள் கலந்து ஒருவர் திட்­டினார். ஆனால் அதற்கு அவர் பதி­லடி கொடுத்தார்.

“உன்­னு­டைய நாடு என்றால் எந்த நாடு? நான் பிரித்­தா­னியப் பெண். பகிங்­ஹம்ஷைர் குடும்­பத்தைச் சேர்ந்­தவள். எனது தாயின் இறுதிப் பெயர் ஸ்மித்” எனக் கூறி தனது அடை­யா­ளத்தை வெளிப்­ப­டுத்­தி­ய­தோடு தன்னைத் தவ­றா­கப்­பே­சி­ய­வ­ருக்கு பதி­லடி கொடுத்­தி­ருக்­கிறார்.

ஸபா­ரியை புதி­தாக பார்­க்கின்­ற­வர்கள் அவரின் சொந்த நாடு எது என வின­வு­வார்கள். இங்­கி­லாந்து என பதில் சொன்ன பிறகும் கூட பாகிஸ்தான் அல்­லது ஏனைய அரபு நாடு­களின் பூர்­வீ­கத்தைக் கொண்­டி­ருக்­கலாம் என்ற எண்­ணத்தில் மீண்டும் வின­வு­வார்கள்.

கடை­க­ளுக்கு பொருட்கள் வாங்கச் செல்­லும்­போது ஆங்­கிலம் தெரி­யாத பெண்­ணுடன் கதைப்­பதைப் போல உரி­மை­யா­ளர்கள் கதைப்­ப­து­முண்டு. இவ்­வா­றான நிலை­மைகள் புதி­தாக இஸ்­லாத்தை ஏற்­றுக்­கொண்ட மேற்குலக பெண்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­களைப் புலப்­ப­டுத்­து­கி­றது.

இது போன்ற சீண்­டல்­களை அன்­றாடம் சகோ­தரி ஸபாரி எதிர் கொள்­கின்­ற­போதும் ஹிஜா­பையோ இஸ்­லாத்­தையோ அவர் கைவி­ட­வில்லை. அவர் குத்­துச்­சண்­டையை பயிற்­று­விக்கச் செல்­கின்ற போது பலர் அவரை பாட­சாலை ஆசி­ரியர் என்­றுதான் நினைப்­பார்கள். ஸபா­ரியின் பிர­தே­சத்தைப் பொறுத்த வரையில் அவ­ரு­டைய பள்­ளிக்கு நல்ல வர­வேற்பு உள்­ளது. இத்­தனை கேலி, கிண்­டல்­க­ளுக்கு மத்­தி­யிலும் நாடு முழு­வதும் குத்­துச்­சண்டை தொடர்­பான கருத்­த­ரங்­குகள் மற்றும் செய­ல­மர்­வு­களை நடத்­து­கிறார். அவர் என்ன செய்­தாரோ அதனை ஏனைய பெண்கள் செய்­வ­தற்கும் வழி சமைக்­கிறார்.

தற்­போது மொத்தம் 9 குத்­துச்­சண்டைப் பயிற்­று­விப்­பா­ளர்­களை முழு­மை­யாக உரு­வாக்­கி­யுள்ளார். இதில் கிறிஸ்­டியா கைப்­­ரி­யானோ என்ற மாற்­று­மத பெண்ணும் அடங்­குவார். இவர் லண்­டனில் தெற்குப் பகு­தியில் சுய­மாக தற்­காப்புக் கலைப்­பள்ளி ஒன்றை ஆரம்­பித்­துள்ளார். “ஒரு பெண் தற்­காப்­புக்­கலை பயிற்­று­விப்­பா­ள­ரான என்­னைப்­பார்த்த பலரும் அதிர்ச்­சி­ய­டை­கி­றார்கள். மேலும்  ஒரு முஸ்லிம் பெண்­ணி­ட­மி­ருந்து தற்­காப்­புக்­கலை பயின்­றதைக் கேள்­விப்­பட்டு மேலும் வியப்­ப­டை­கி­றார்கள்” என 33 வய­து­டைய கைப்­ரி­யானோ தெரி­வித்தார்.

சகோ­தரி ஸபா­ரியின் முயற்­சி­யி­னாலும் அவ­ரு­டைய கண­வரின் ஒத்­து­ழைப்­பி­னாலும் அவ­ரைப்­போன்ற 9 பயிற்­று­விப்­பா­ளர்­கள் உரு­வா­கி­யுள்ளனர். மிக்ஸட் மார்­ஷியல்  ஆர்ட்ஸ் (எம்.எம். ஏ) எனும் நிறு­வ­னத்தின் கீழ் பலர் தமது பயிற்­சி­களைத் தொடர்­கின்­றனர். விளை­யாட்டு மற்றும் தற்­காப்­புக்­க­லையில் பெண்­களைச் சிறந்த முறையில் பயிற்­று­வித்து பெரிய தற்காப்புக்கலைப் பள்ளியொன்றை ஆரம்பிக்க வேண்டும் என்பதே ஸபாரியுடைய கனவாகும்.
-Vidivelli

No comments

Powered by Blogger.