மஹிந்த அரசில் முடியுமென்றால், ரணில் அரசில் ஏன் முடியாது...?
#மாணவர்கள்செய்தகுற்றத்தை #நியாயப்படுத்த_வரவில்லை!
#இருந்தும்....!
சென்ற அரசாங்கத்தில் சீகிரியா புராதன சின்னங்களை மையினால் சேதப்படுத்தியமைக்காக கல்முனையை சேர்ந்த முஸ்லிம் மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டதை நாம் அறிவோம்!
பின்னர் தற்போதைய இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அவர்களின் முயற்சியினால் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ் அவர்களின் நேரடி தலையீட்டினால், குறிப்பிட்ட மாணவி விடுதலை செய்யப்பட்டதையும் நாம் அறிவோம்!!!!!
இது புதிதல்ல!!
எனவேதான் அண்மையில் கிரலாகல தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியதால் தென்கிழக்கு பல்கலைகழகத்தின் மாணவர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டார்கள்!
இதுவும் புதிதல்ல!!!
ஏனெனில் இதற்கு முன்னர் பெரும்பான்மையின மக்கள் தமது சுற்றுலாப் பயணத்தின்போது இதுபோன்ற இலங்கையின் வரலாற்றுச் சின்னங்களின் முன்னே புகைப்படம் எடுப்பதும் அதனை வலைத்தளங்களில் பதிவிடுவதும் புதுமையுமல்ல!
புதிதுமல்ல!!!!
இருந்தும் இலங்கை சட்டத்தின்படி வரலாற்றுச் சின்னங்களை சேதப்படுத்துவது குற்றச்செயலாகும் என வரலாற்று சின்னங்கள் முன் பதாகைகள் போடப்பட்டுள்ளதையும் நாம் அறிவோம்..!!!!!
எனவேதான் குறிப்பிட்ட மாணவர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டு தற்செயலாக நடந்தவை எனவும் இதற்கு மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில்!!!!
சென்ற அரசாங்கத்தில் சீகிரிய சின்னங்களில் தனது பெயரை மையினால் சேதப்படுத்த முயன்றார் என முஸ்லிம் மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டபோது இச்சம்பவத்தை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ HMM ஹரீஸ் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்ற வேளையில் ஹரீஸ் mp அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் இருந்தவாறே ஒரு தொலைபேசி அழைப்பில் குறிப்பிட்ட மாணவியை விடுதலை செய்ய பங்களிப்பு செய்திருந்தார்!!!!!!
எனவேதான் அன்று எந்த அதிகாரமுமில்லாத ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கௌரவ ஹரீஸ் அவர்கள் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ் அவர்களின் மூலம் குறிப்பிட்ட மாணவியை விடுதலை செய்யவைத்தார் என்றால்!!!
இன்று கௌரவ ஹரீஸ் mp இதுவரையில் பிரதமர் உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய தலைகளுடன் நேரில் சென்று கலந்துரையாடியும் கூட, குறிப்பிட்ட ஏழு மாணவர்களின் விடுதலைக்கு இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை என்றால்!!!!!
எமது முஸ்லிம் அரசியல் வாதிகளின் அதிகாரம் எந்த இடம்வரை செல்லும் என்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்களில் ஒருவரும் எதிர்கால ஜனாதிபதி ஆசன கனவில் மிதக்கும் சஜித் பிரேமதாச அவர்களுடைய கருத்தை எடுத்துக்கொள்ளலாம்!!!!!!
மஹிந்த அரசில் முடியும் என்றால்!
ரணில் அரசில் இதுவரையில் ஏன் முடியாது தவிப்பது ஹரீஸ் mp அவர்களே..!?
(From FB)
நாட்டின் நீதிமன்றங்களை அரசியல் தலையீடுகள் இன்றி, சுயாதீனமான இயங்கவிடுவது பெரும் தவறு என்கிறார்கள் முஸ்லிம்கள் - சுப்பர்
ReplyDeleteஇப்ப, கூட 21 முஸ்லிம் MPகளும் மகிந்தவுக்கு ஆதரவளித்தால், மிச்சம் சொச்ச MPகளை காசு கொடுத்து வாங்கி ஆட்சியை பிடித்து விடுவார்.
மகிந்த ஆட்சியென்றால் சில மணி நேரத்தில் ஞானசேர பிக்குவும் வெளியே வந்துவிடுவார்.
Please compare with age and education level.
ReplyDeleteஇதை தெரியாமல் செய்த குற்றம் என்று சொன்னால் அது மடைமை.
ReplyDeleteநீதி சகலருக்கும் பொதுவானது. அதில் முஸ்லிம்கள் விதிவிலக்கல்ல.
இவர்களது திடீர் விடுதலை பெரும்பான்மை சமூகம் மத்தியில் பாரிய அதிர்வலைகளை உண்டுபன்னலாம்.......
இந்த 7 மாணவர்களும் தாம் செய்தது தவறு என்பதை உணந்திருக்கவில்லை என்பது முற்றிலும் உண்மை அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பெரும்பாலானவர்கள் தாம் செய்யும் செயலை அதன் பின் விளைவுகளை அலசி ஆராய்ந்து பண்ணுவதுமில்லை. அதற்காக தான் செய்த செயலை நியாயப்படுத்த முடியாது.தெரிந்தோ தெரியாமலோ அல்லது அறியாமையால் செய்தாலோ செய்த விடயம் குற்றமாக கருதப்படும் பட்சத்தில் தண்டனை பெற்றே ஆக வேண்டும்.இதை விடுத்து நான் தெரியாமல் செய்திட்டன் தண்டனை இல்லாமல் மன்னித்து விடுங்கள் என்பது நியாயமாகாது. எனவே அவர்கள் செய்த தவறுக்கு தண்டனை அனுபவிப்பது இப்போதைய சூழ்நிலையில் நல்லது.அவர்கள் பெரும் குற்றமோ அல்லது தேச விரோத குற்றமோ செய்யவில்லை என்பதால் தண்டணை பணம் செலுத்த வேண்டி வரும் இதனை அவர்கள் ஏழை மாணவர்களாக இருப்பதால் பணம் கொடுத்து உதவலாம். இதைவிடுத்து தண்டணை இல்லாமல் காப்பாற்றுவது மிதவாத பெரும்பான்மையின மக்களையும் மதவாதியாக அல்லது நம்மீது வெறுப்புடையவர்களாக மாற்றும். அத்தோடு ஏனையோருக்கும் இது ஒரு பாடமாக இருக்கும். முக்கியமாக கண்ட இடங்களிலெல்லாம் படம் எடுத்து சமுக வலைத்தளங்களில் பகிர்வதை நிறுத்த வேண்டும் முக்கியமாக புனிதத் தலங்களில் படம் எடுப்பது நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு செய்வது நமது நம்பிக்கையில் குறைபாடு உண்டாக மாட்டாது.
ReplyDeleteஎனவே நாம் மிகவும் சிறுபான்மையினராக இருப்பதால் எல்லா விடயங்களிலளையும் நன்கு ஆராய்ந்து செய்ய வேண்டும். அடுத்தது தப்பான செயலுக்கு அரசியல் வாதியை நாடி தண்டனையிலிருந்து தப்பிக்க முயல்வதை முற்றாக நிறுத்த வேண்டும்.