Header Ads



தேசியக் கொடியை ஏற்றி வைக்குமாறு, நாட்டு மக்களிடம் வேண்டுகோள்

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனக் கட்டடங்கள், இல்லங்கள் ஆகியவற்றில் தேசியக் கொடியை ஏற்றி வைக்குமாறு, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன, நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 07 ஆம் திகதி வரையிலான ஒரு வார காலப்பகுதிக்குள், தேசியக் கொடியை ஏற்றிவைக்குமாறும் அமைச்சர் அனைவரிடமும் கேட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரது தலைமையில், காலி முகத்திடலில், பெப்ரவரி 4 ஆம் திகதி காலை 9 மணி முதல் இடம்பெறவுள்ள  71 ஆவது சுதந்திர தின விழா நிகழ்வில், மாலை தீவு புதிய ஜனாதிபதி இப்றாஹீம் முஹம்மத் சாலிஹ், விசேட அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.