Header Ads



அப்பாவி மாணவர்களுக்கு, நடந்த அநியாயம் - விடுதலைக்காக அணிதிரள அழைப்பு (உண்மைகள் அம்பலம்)

- SAIFUL ISLAM -

எனது சக நண்பர்களான குறித்த 8 பல்கலைக்கழக மாணவர்களும் விளக்கமறியலில் வைக்கப்படுமுன் புதன்கிழமை நள்ளிரவு நானும் ஹொரவபொதான பொலிஸ் அதிகாரிகளினால் அங்கு அழைத்துச் செல்லப்பட்டேன். ஏனெனில் நண்பர்கள் 1 வருடத்துக்கு முன்னர் வெளியிட்ட புகைப்படங்கள் எடுக்கப்பட்ட குறித்த (2018.01.04) trip இல் நானும் கலந்துகொண்டிருந்தேன். ஆனால் குறித்த கவனிப்பாரற்ற பிரதேசத்துக்கு(தூபி) நான் சென்றிருக்கவில்லை. இருந்தும் நண்பன் rikkas என்னையும் tag பன்னியிருந்தார். ஏனெனில் வேறு பிரதேசங்களில் எடுக்கப்பட்ட போட்டோக்களில் நானும் இருப்பதனால்.

இப்பிரச்சினை நாடுமுழுக்க பெரிதாக விஷ்வரூபமெடுத்திருந்தபோது கடந்த புதன்கிழமை நாங்கள் பல்கலைக்கழக விடுதிஅறையில் இதற்கு என்ன காரணம், திடீரென இப்பதிவு சிங்கள ஊடகங்களிலும் சிங்கள இனவாதிகளினது Facebook பக்கங்களிலும் 1 வருடத்துக்குப் பிறகு கடந்த இரு நாட்களாக தேசக்குற்றம் போன்று வடிவம் பெற்றது எவ்வாறு என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தோம். இந்நிலையில் தலையில் விழுந்தது இன்னுமோர் அடி. எந்தவிதமான உண்மைத் தன்மையையும் ஆராயாமல்,  இந்த நண்பர்கள் மீதான பழிவாங்கல்களை தமிழில் பதிவேற்றம் செய்து சூத்திரதாரிகளுக்கு வலுவேற்றினர்.

இந்நேரம் சில முக்கியமான lawyers களுடன் எனது நண்பர்களினது தந்தைமார்கள் இவ்விடயம் தொடர்பாகவும் இதன் பின்னால் உள்ள சட்டச்சிக்கல்கள் தொடர்பாகவும் வினவிக்கொண்டிருக்கும்போதே அன்று புதன்கிழமை நண்பகல் அக்கரைப்பற்று பொலிஸ் பொருப்பதிகாரி எங்களில் ஒருவரைத் தொடர்புகொண்டு உடனடியாக அக்கரைப்பற்று பொலிஸுக்கு அனைவரும் வரும்படியும் ஹொரவபொதான பொலிஸ் உங்களை அழைத்துச்செல்ல வந்திருப்பதாகவும் கூறினார். இதற்கிடையில் நண்பர்களினது மொபைல்களுக்கு பல புதிய இலக்கங்களிலிருந்து அழைப்புகளும் மிரட்டல்களும் வந்தவண்ணமிருந்தன. அதிலும் எனது சிங்கள நண்பன் ஒருவன் அவனுக்கு வந்த message ஒன்றை எனக்கு காட்டினான். அதாவது அவனிடம் எனது நண்பர்களினது போட்டோக்களை அனுப்பி இவர்களினது mobile no களை எடுத்து தர இயலுமா என்று கேட்டு fake id ஒன்றிலிருந்து message வந்திருந்தது.

இதன்போது எங்களுக்கு நெருக்கமான சில சிங்கள நண்பர்கள், மேற்குறித்த பதிவை இட்ட நபர்களை தொடர்புகொண்டு இது 1 வருடத்துக்கு முன் நடந்ததாகவும் குறித்த மாணவர்களுக்கு இவ்விடம் பற்றி தெரிந்திருக்கவில்லை எனக் கூறியும் பயனில்லை. இதைப் பரப்புபவர்கள் வேறு நோக்கோடு இருப்பது எங்களுக்கு தெளிவாக தெரிந்திருந்தது. அதாவது இறுதிப் பரீட்சை முடிவடைந்த சிறிது நேரத்தில் இது பரப்பப்பட்டதும் எங்களுக்கு தெரியும். இந்நேரம் பொலிஸுக்கு போவதா இல்லையா என எல்லோரும் பதட்டப்பட்டிருந்தபோது சில lawyers நீங்கள் போகவாணாம், பொலிஸ் உங்களை எக்காரணமும் இன்றி விளக்கமறியலில் வைப்பார்கள் எனக் கூறினர். இதை வேறுவிதமாக நீதிமன்றத்தில் சந்திக்கலாம் போகாதீர்கள் என்றனர். இருந்தும் ஓரிரு பெற்றோர் நாங்கள் ஹொரவபொதான பொலிஸ் உயரதிகாரியுடன் பேசியுள்ளோம். விசாரித்துவிட்டு நீதிமன்றத்தில் நடந்த உண்மைகளைக் கூறி பிழை செய்யாத உங்களை விட்டுவிடுவார்கள், எனவே நீங்கள் வேறு வாகனம் ஒன்றில் உடனடியாக ஹொரவபொதான பொலிஸுக்கு வாருங்கள் நாங்கள் இங்குதான் உள்ளோம் என்று.

இதன்பின் நண்பர்கள் அனைவரும் அங்கு போவதாக முடிவெடுத்தனர். பெற்றோர்களது வேண்டுகோளுக்கிணங்க. இதன்போது மூதூரிலிருந்து நான் வருவதாகக் கூறி நான் மூதூர் பயணமாயிருந்தேன். ஏனைய நண்பர்களும் இரு பொலிஸும் ஒரு வேனிலும் பின்னால் பொலிஸ் வண்டியுமாக புதன் அன்று இரவு 11.15 மணியளவில் மூதூர் வந்திருந்தனர். மூதூரிலிருந்து நானும் இணைந்து நாங்கள் ஹொரவபொதான பொலிஸை அடையும்போது இரவு 12 மணி தாண்டியிருந்தது. சேர்ந்தவுடனேயே நாங்கள் பொலிஸ் பொருப்பதிகாரி முன் நிறுத்தப்பட்டோம். அவ்விடத்திலேயே ஆரம்பகட்ட விசாரனை ஆரம்பித்தது. கல்முனையிலிருந்து trip ஆரம்பித்த இடத்திலிருந்து (2018.01.03) குறித்த சர்ச்சைக்குரிய இடத்தில் ஏறும்வரை (2018.01.05) முழுவதுமாக விசாரித்து எழுதி எடுத்துக் கொண்டனர். நான் குறித்த இடத்தில் ஏறாததால் என்னை வீடு செல்லும்படியும் மற்றய நண்பர்களை பொலிஸில் இருக்குமாறும் காலையில் தனித்தனியாக வாக்குமூலம் பெறவேண்டும் எனவும் கூறினர். அன்றிரவு பொலிஸ் அதிகாரிகள் எங்களுடன் மரியாதையாகவே நடந்துகொண்டனர்.

நான் அன்றிரவு வீடு வந்து மறுநாள் காலை நண்பர்களை பார்வையிட சென்ற வேளை அங்கு நிலைமை தலைகீழாக மாறியிருந்தது. விளக்கமறியல் தான் என்பது நீதிமன்றம் செல்லமுன்பே அங்கு வந்திருந்த அவ்வூர் சிங்கள சகோதரர்களினதும் ஹிரு டிவி ஊடகவியலாளரினதும் முகத்தில் இருந்த சந்தோசத்திலிருந்து உறுதியாயிருந்தது. பின்னர் ஒவ்வொரு நண்பரிடத்திலும் தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டு நண்பகலின் பின்னர் நண்பர்கள் கெப்பித்திக்கொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு வரும் February 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

news பதிவுகளில் எனது நண்பர்களுக்கு எதிராக பின்னூட்டம் இட்டும் மற்றும் ஏனைய பதிவுகளில் அவர்களை மோசமாக சித்தரித்தும் சமூகத்தைக் காக்கும் உத்தமர்களே. உங்களுக்கு என்ன தெரியும் இப்பிரச்சினை பற்றி, அதேபோல் உங்களுக்கு என்ன தெரியும் எனது நண்பர்கள் பற்றி. குறித்த கல் உள்ள இடத்துக்கு இதற்கு முன் சென்றுள்ளீர்களா? சென்றிருந்தால் நீங்களும் உங்களது மனைவி பிள்ளைகளுடன் மேலேறி ஒவ்வொரு கோணத்தில் photos எடுத்திருப்பீர்கள். ஏனென்றால் அவ்விடம் அவ்வாறுதான் உள்ளது. அவ்விடத்தில் யாருடைய கவனிப்பும் இல்லை. ஏன் இந்நண்பர்களுல் ஒருவன் அவ்வூர்காரன்தான். அவனுக்கே தெரியாது. அவனும் இது ஒரு சாதாரண கல் என இவ்வளவு காலம் நினைத்திருந்ததால் தான் வீடுவந்த நண்பர்களுடன் அவனும் சேர்ந்து இதன்மேல் ஏறி photo பிடித்துள்ளான். அவர்களுக்கு இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தால் அப்போதே செய்திருக்கலாமே. ஏனெனில் அன்றிரவே (2018.01.05) நண்பன் rikkas இப்போட்டோக்களை fb இல் பதிவேற்றிவிட்டான். நன்றாக விளக்கவேண்டும் இது நன்கு திட்டமிடப்பட்டு இம்மாணவர்களைப் பழிவாங்க இங்குள்ள சில கிருமிகள் சிங்கள இனவாதிகளைப் பயன்படுத்தி செய்த வேளை. ஏனெனில் இறுதி பரீட்சை முடிந்த அன்றுதான் இது சகல இனவாதிகளினதும் fb இலும் ஹிரு செய்தியிலும் ஒரே நேரத்தில் பரப்பப்பட்டது. இந்நண்பர்களில் இருவர் இரு துறைகளில் batch topper ஆக வரவிருக்கின்றனர். அவர்களுக்கான பழிதீர்த்தல்தான் இவை. இது யாவும்தெரியாது அறியாது விளக்கமளிக்க வரவேண்டாம் உத்தமர்களே.

அத்துடன் இந்நண்பர்களில் ஒருவன் university வர ஒருமாதத்துக்கு முன் தந்தையை இழந்தவன். இன்னுமொருவன் இங்கு படித்துக் கொண்டிருக்கும்போதே தந்தையை இழந்தவன். இவர்கள் எவ்வளவு சிரமத்துக்குட்பட்டு இந்த கற்கைகளை பூர்த்திசெய்தார்கள் என எனக்கு தெரியும். அதில் சிலர் மிகவும் இலகிய மனம் படைத்தவர்கள். அடுத்தவர்களது மனது நோகாது நடப்பதில் முன்னோடியான நண்பர்கள். தயவுசெய்து இவர்கள் பற்றி அறியாது இவர்களை மோசமாக சித்தரிக்க வேண்டாம்.

இறுதியாக இவர்களினது விடுதலைக்காக பொருப்புமிக்க அதிகாரிகள், பல்கலைக்கழக பொருப்புதார் அதிகாரிகள், மாணவர் ஒன்றியம் என்பன முன்வரவேண்டும்...

4 comments:

  1. We have to help them but it is not a unfare puniahment.

    ReplyDelete
  2. ஒன்னும் தெரியாத பாப்பா போட்டுச்சாம் தாப்பாள் ஐயோ ஐயோ

    ReplyDelete
  3. Howmany holy places (masjids ) are damaged by BBS and Racist in this country... There are so many evidences of clips available... Did the Media talk of this... Did police arrest them ?

    Since there was not notice board... any body can do this type act... Why make it big?

    For this media .. they did not have time to broadcast Digan, Aluthgama destruction by racist.... but they highlight this unintentional event so high.

    Being a Muslim... Take avoid photos as much as possible but for official reasons only.

    Allah knows best.

    Allah is enough for them...

    ReplyDelete
  4. please if cant help them do not interfere.all people are citizen of this world.

    ReplyDelete

Powered by Blogger.