மாரப்பனவையும், மலிக்கையும் பதவி விலகுமாறு கோரிக்கை
அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் இருவரை கட்டாயம் பதவிகளில் இருந்து நீக்கிட்டு, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை வகிக்க தகுதியானவர்களுக்கு அந்த பதவிகளை வழங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கடசியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவான திலக் மாரப்பன மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் கட்சியை நேசிப்பவர்களாக இருந்தால், பதவிகளை அர்ப்பணித்து பதவி விலகி, பாலித ரங்கே பண்டார போன்றவருக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கேட்டுக்கொண்டுள்ளார்.
ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் மீண்டும் தலைத்தூக்க இடமளிக்காது, ஐக்கிய தேசியக் கட்சியை வலுப்படுத்த கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்காள்ள வேண்டும் என்ற முயற்சியிலேயே கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சித்து வருவதாகவும் ஹேஷா விதானகே குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment