Header Ads



இப்போது இருப்பது, எமது அரசாங்கம் - கபீர்

இப்போது இருப்பது  எமது அரசாங்கம் என்பதனால், நாட்டு மக்களுக்குள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதோடு, உயர்ந்தபட்ச சலுகைகளை இந்த வருடத்துக்குள் வழங்கி தேர்தல் ஒன்றுக்கு செல்லவுள்ளதாக அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.

மாவனல்லைப் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் கூறினார்.

கடந்த அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கம் எனும் பெயரில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் பங்காளியாக அமைக்கப்பட்டிருந்தது. இதனால், மக்களுக்கு சேவையாற்றுவதில் இழுபறி நிலைமைகள் இருந்தன.

ஆனால், தற்பொழுதுள்ள அரசாங்கம் ஐக்கிய தேசிய முன்னணியுடையது. இதில் மக்களுக்கு தேவையான சலுகைகளை உரிய முறையில் வழங்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.  

No comments

Powered by Blogger.