Header Ads



‘ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டாம்’


நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயளலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுமன்னிப்பு வழங்கக் கூடாதென, காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட, சட்டமா அதிபர் மற்றும் நீதி அமைச்சிடம், கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று (28) பிற்பகல் வேளையில், அவர் இந்தக் கடிதத்தைக் கையளித்தார்.

ஞானசார தேரருக்கு அவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால், அது, தனக்கும் நீதவானுக்கும், அரச சட்டத்தரணிகளுக்கும் அநீதி இழைப்பதாக அமையுமென்றும் எனவே, அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்க வேண்டாமென, சட்டமா அதிபர், நீதிமன்ற அமைச்சிடமும் வேண்டுகோள் விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டாம் எனத் தெரிவித்து, ஜனாதிபதியிடமும் தான் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. President should not give pardon for him.That extrime monk should get jail punishtment untill his jail turms end.

    ReplyDelete

Powered by Blogger.