அம்பாறை அரசாங்க அதிபராக முஸ்லிம், ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் மொழி மற்றும் இனத்தை சேர்ந்த அதிகாரியையே மாவட்ட அரசாங்க அதிபராக நியமிப்பதுவே நாட்டில் பெரும்பாலும் நடைமுறையிலுள்ள வழக்கம்.
ஆனால் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவருகின்ற போதும் கடந்த பல தசாப்தங்களாக தமிழ் பேசும் முஸ்லிம் அதிகாரி ஒருவரை அரசாங்க அதிபராக நியமிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டேவருகிறது.
மேலும் அம்பாறை மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர்களையாவது முஸ்லிம் அதிகாரி ஒருவரை நியமிக்காது வேறு இனத்தவர்களை நியமித்திருப்பதானது அம்பாறையில் பெரும்பான்மையாக வாழுகின்ற முஸ்லிம்களுக்கு இடம்பெற்றுவரும் பெரும் அநீதியாகும்.
எனவே மிக நீண்ட காலமாக நிலவிவரும் இப்புறக்கணிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக கல்முனையன்ஸ் போரம் பல முயற்சிக ஈடுபட்டுவருகின்றது.
இதன் ஒர் அங்கமாக மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக முஸ்லிம் அதிகாரி ஒருவரை நியமிக்குமாறும், முதற்கட்டமாக மேலதிக அரசாங்க அதிபரையாவது முஸ்லிம் அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு கோரிய மனு அதிமேதகு ஜனாதிபதி அவர்களிற்கு கடந்த 07-01-2019ம் திகதி கல்முனையன்ஸ் போரத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கான அழுத்தங்கள் பல தரப்பட்ட வகையிலும் கல்முனையன்ஸ் போரத்தினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மாவட்டத்தில் பெரும்பாண்மையாக வாழும் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் மொழிப்பிரச்சினை, சமூக ரீதியான புறக்கணிப்புகள் என்பவற்றை கருத்திற்கொண்டே மேற்படி விடயம் கல்முனையன்ஸ் போரத்தினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment