Header Ads



ஞானசாரரை விடுவித்தால் குறித்ததொரு மக்களின் வாக்குகள், இல்லாது போகுமென என ஜனாதிபதி அஞ்சக்கூடாது

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்வதனால் நாட்டில் குறித்ததொரு மக்கள் தொகையினரின் வாக்குகள் இல்லாது போகும் என ஜனாதிபதி அஞ்சினால், அந்த எண்ணத்தை தற்போதே நீக்கிக்கொள்ள வேண்டும். நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு செயற்பட்ட ஒரு தேரரை விடுதலை செய்வதனை மக்கள் எதிர்க்க மாட்டார்கள். 

ஞானசார தேரர் கொலை, கொள்ளை போன்ற குற்றங்களைப் புரிந்தவர் அல்ல. நாட்டிற்காகவும், நாட்டின் நலனுக்காகவும், தேசிய பாதுகாப்பிற்காகவும் தொடர்ந்து குரல்  கொடுத்து வந்த ஒருவராவார். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திர தினத்திற்கு முன்னர் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்ய வேண்டும் என இலங்கை இந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்திற்கு முன்பதாக ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இலங்கை இந்து சம்மேளனம், இந்து இளைஞர் அமைப்பு மற்றும் இலங்கை குருக்கள் பேரவை என்பன இணைந்து நேற்று சனிக்கிழமை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவர் டி.அருண்காந்த் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

சுதந்திர தினத்திற்கு முன்னர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விடயத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். இந்நாட்டில் வாழும் இந்துக்களின் சார்பாக இக்கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

கடந்த காலங்களில் பல்வேறு அரச சார்பற்ற அமைப்புக்களாலும், மத அமைப்புக்களாலும் இந்துக்கள் வேறு மதங்களுக்கு மாற்றப்படுகின்ற அச்சுறுத்தல் நிலையொன்று காணப்பட்டது. அவ்வேளையில் ஞானசார தேரர் நாடு முழுவதிலும் மத மாற்றத்திற்கு எதிராக மேற்கொண்ட விழிப்புணர்வு பிரசாரங்களால் விழிப்புணர்வடைந்த இந்துக்கள் மதமாற்ற முயற்சிகளில் இருந்து தம்மைக் காத்துக்கொண்டனர். அதேபோன்று நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்தும் பெரிதும் விழிப்புணர்வு பெற்றனர்.

ஞானசார தேரர் கொலை, கொள்ளை போன்ற குற்றங்களைப் புரிந்தவர் அல்ல. நாட்டிற்காகவும், நாட்டின் நலனுக்காகவும், தேசிய பாதுகாப்பிற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவராவார். அத்தகைய ஒருவரே தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார். நாட்டிற்காக போராடியதாலேயே அவருக்கு இன்று இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

பொதுமன்னிப்பு வழங்கி ஞானசார தேரரை விடுதலை செய்வதனால் நாட்டில் குறித்ததொரு மக்கள் தொகையினரின் வாக்குகள் இல்லாது போகும் என ஜனாதிபதி அஞ்சினால், அந்த எண்ணத்தை தற்போதே நீக்கிக்கொள்ள வேண்டும். நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு செயற்பட்ட ஒரு தேரரை விடுதலை செய்வதனை மக்கள் எதிர்க்க மாட்டார்கள். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திர தினத்திற்கு முன்னர் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

9 comments:

  1. we know , next Army will open your head , careful Racist drug culprit.

    ReplyDelete
  2. காணாமல் போன தமிழ் பயங்கரவாதிகளுக்காக தமிழர்கள் ஆர்ப்பாட்டம் பண்ணுவது நியாயம். ஆனால் அதுவே ஏக்னோலிகொட மனைவியின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியவனை இவனுங்களுக்கு விடுதலை செய்ய வேண்டும். என்ன ஒரு கேவலமான கொள்ளை இந்த ஈன தமிழர்களிடம்

    ReplyDelete
  3. இந்த ஆர்ப்பாட்டத்தில் வெறும் 5 பேர் கலந்துகொண்டாக தகவல் ஆகவே ஒன்றுமில்லாத இந்த பிச்சைக்காரனுக்கு jaffna இணையதளம் ஒரு செய்தி போடுவதே நேரத்தை வீணடிக்கும் செயல்தான்

    ReplyDelete
  4. விடுதலை செய்தாலும், செய்யாவிட்டாலும் படுதோல்விதான்.

    ReplyDelete
  5. அருன் காந்தா ; ஞானசார உங்கட டயஸ்போரா வால் என்று பொதுபல சேனாக்கு ஜேர்மனி காரன்ட பெயரில் கட்டிடம் கட்டினப் போது தெரியும், நாட்டுக்கு நீங்க ஒரு மயிரும் புடுங்க இல்லை, சோணி தமிழீழம் மலராம உளவாளியாக செயற்பட்டு இலங்கையை பிரிக்காமல் இருந்தான் அதற்கு பதிலடி தான் இத்தனை தாக்குதல் மோட்டு சிங்களவன் வச்சு

    ReplyDelete
  6. பிள்ளையார் ஆலயத்தில் அத்துமீறி அமைக்கப்பட்ட புத்தர்சிலை அவசரமாக திறப்பு
    Published on 2019-01-23 17:06:06

    ReplyDelete
  7. இவர் சொல்வதை இவருடைய சமூகம் செய்வதற்கு தயராக இருப்பதாக நினைப்பு.

    ReplyDelete
  8. அருண்காந்துக்கு என்ன அவ்வளவு பெரிய Publicity. அதுவும் Jaffna Muslim ஊடாக. Ok Boss, இந்த ஆசாமி மொதல்ல தன்ட இனத்திற்கு செய்த ஒரு சின்ன சேவையை சொல்லட்டும பார்ப்போம்;.

    ReplyDelete
  9. Enha என்னுடைய comment?

    ReplyDelete

Powered by Blogger.