உறுதியான அடிப்படைகளைக் கொண்ட, சமூகத்தை நோக்கி...!
நமது முன்னோர்களின் ஆன்மீகம், அரசியல், கல்வி, தொழில், வியாபாரம் என அனைத்து விடயங்களும் உண்மை, நீதி, நேர்மை, ஒழுக்கம், பணிவு , பெருந்தன்மை, அன்பு என்ற பலமான அடிப்படைகளின் மீது அமையப்பெற்றதனால் ஒவ்வொரு துறையும் பல நன்மைகளை நமது சமூகத்திற்கு மாத்திரமின்றி முழு உலகுக்கும் வழங்கியது.
இன்றைய பெரும்பாலான நடவடிக்கைகள் பெருமை, அநீதி , பொய்,மோசடி, ஊழல் , குருகிய சுய நலம், ஒழுக்கமின்மை, குரோதம், பொறாமை என்ற அடிப்படைகளை கொண்டதாக அமைந்ததனால் ஒவ்வொரு துறையும் அதனது பலாபலனை தருவதிருக்க , அது நிலைத்திருப்பதே கேள்விக்குறியாகி விட்டது.
எனவே நமது அடிப்படைகள் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் கட்டமைக்கப்பட வேண்டும். அதற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டு விவரிக்க பட வேண்டும். இல்லையெனில் அனைத்து துறைகளும் பாழடைந்து, உலகின் சமனிலை முழுமையாக சீர் குழைந்து மனித உருவங்களில் மிருகங்கள் வாழும் பாராக இவ்வைகயகம் மாற்றமடைந்து விடும்.
மேற்கூறப்பட்ட அடிப்படைகளை கவனிக்கும் போது அவை உள்ளம் சார்ந்தவை என்பதை உணரலாம். எனவே உள்ளத்தை தூய்மைப்படுத்துவது இன்றைய காலத்தின் முதற்தேவையாகும். நபித்துவத்தின் முக்கிய நோக்கங்களிலொன்றாக உளத்தூய்மையை அல் குர்ஆன் பல இடங்களில் வழியுறுத்தியுள்ளது. எந்தளவென்றால் அல் குர்ஆன், சுன்னாவை கற்பிப்பதை விட முதன்மைப்படுத்தப்பட்ட விடயமாக கருதப்படுகின்றது. இக்கருத்திற்கான ஆதாரமாக அல் குர்ஆன் விளங்குகின்ற போதும், நமது இன்றைய நிலை நடைமுறை ஆதாரமாக விளங்குகின்றது.
அதே போன்று நபி ஸல்லல்லாாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் உள்ளம் சீரடைந்தால் முழு உடலும் சீரடையுமென்றார்கள். எனவே இவ்வியத்திற்கு முக்கயத்துவமளிப்பது காலத்தின் தேவை மாத்திரமல்ல. சன்மார்க்க கடமையுமாகும்.
குறிப்பாக ஆன்மிக தலைமைகளும், அரசியல் தலைமைகளும் இவ்விடத்தை கருத்திற் கொண்டு செயற்படுவது அவசியமாகும். அவ்வாறு செயற்படும் போது நமது நடைமுறைப்பிரச்சினைகள் பலவற்றுக்கு இலகுவான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என நம்புகிறேன்.
ஒரு காலத்தில் ஆன்மிகவாதிகள் என கருதப்பட்டவர்கள் தான் சமூகத்தில் இந்த அடிப்படைகள் பாதுகாக்கப்பட பெரும் பங்களிப்பை வழங்கியது மாத்திரமின்றி அவர்கள் முன்னுதாரணமாகவும் விளங்கினர். அதனால் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலுள்ளவர்களும் அவர்களது ஆலோசனைகளுக்கு செவிசாய்த்தனர். துரதிஷ்டவசமான விடயம் யாதெனில் இன்றைய சில ஆன்மிக ஈடுபாடாளர்களும் தங்களது இருப்பை, சலுகைகளைப் பாதுகாக்க பொய்யையும், அடிப்படையற்ற வதந்திகளையும், கையிலடுத்திருப்பதாகும்.
நமது கல்விக்கூடங்கள் பாலர் வகுப்பு முதல் அனைத்து மட்டங்களிலும் உண்மை, நேர்மை, நீதி, பெருந்தன்மை, பணிவு என்பன அடிப்படை அம்சமாக ஊட்டப்பட வேண்டும்.
அரச தொழில் பெறுவதால் வாழ்கையில் வெற்றி பெறலாம் என்ற கோஷங்களை விட இந்த நற்பண்புகள் அடிப்படையாக அமைந்தால்தான் வெற்றி பெறலாம் என்ற கோஷம் மேலோங்க வேண்டும்.
இவ்வடிப்படைகளை சமூகத்தில் மலரச்செய்வதற்காக பள்ளிவாயல்களின் பங்களிப்பு அளப்பெரியதாகும். அதற்கான முயற்சிகள் பள்ளிவாயல்களில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஒவ்வொரு குடும்ப தலைவனும் தான் இவ்வடிப்படைகளைக் கொண்ட மனிதனாக தன்னை ஒழுங்குபடுத்துவதோடு , தனது குடும்பத்தையும் வழிகாட்ட வேண்டும்.
குடும்பம், சமய தலங்கள், கல்விக் கூடங்கள் இவைதான் சமூக மாற்றத்தின் அடிப்படை கூறுகளாகும். இவற்றை பாதிக்கும் காரணிகளை அடையாளப்படுத்தி அவற்றிலிருந்து எச்சரிக்கையாக இருப்பதில் அனைத்து வேறுபாடுகளையும் களைந்து செயற்பட வேண்டும்.
இவ்வாறான நல்ல அடிப்படைகளைக் கொண்ட முழுமையான சமூகத்தை உருவாக்கும் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். அதற்கான அனைத்து வழிவகைகளையும் எல்லாம் வல்ல அழ்ழாஹ் இலகுவாக்கித்தருவானாக!
அவ்வாறான முழுமை பெற்ற சமூகத்தை காணாத வரை எமது உயிர்களை வாங்காமல் இருப்பானாக!
وصلي الله علي نبينا محمد وعلي آله وصحبه أجمعين.
والحمد لله رب العالمين.
அஷ்ஷேக் A.M.MUHSIN ( Mawahibi)
Post a Comment