தப்லிக் இஜ்திமாவுக்கு பாதுகாப்புக்கு நின்ற, போலிஸ்காரருடைய ஆச்சரியமிகு அனுபவம்
இனாம் குளத்தூர் இஜ்திமா நிகழ்வுக்கு பின் இரவு இஜ்திமா பந்தலிளிருந்து 2 கி.மீ நடந்து வந்து காரை ஸ்டார்ட் செய்து கிளம்பியப்ப ஒரு போலிஸ்காரர் வந்து காரை நிறுத்தி சார் மணப்பாறை பக்கம் சென்றால் என்னை மணப்பாறையில் ட்ராப் செய்ய முடியுமா ப்ளீஸ் என்றார். ஏற்றிக் கொண்டு அமர்ந்ததும் அவரிடம் கேட்டேன் எத்தனை நாள் இங்கு ட்யூட்டி ? இஜ்திமா ட்யூட்டி அனுவம் எப்படி? என்று கேட்டேன்.
இனாம் குளத்தூரில் ஆரம்பித்தவர் மணவை வந்து இறங்கும் வரை 20 நிமிடம் வரை மூச்சு விடாது போலிஸ்காரர் பேசியது கீழே.
சார் வேலை நிமித்தம் அடிக்கடி இதே இனாம் குளத்தூர் ஹைவேயில் போகும் போது இஜ்திமா வேலைகளை பார்த்தே திருச்சி செல்வேன்.இவ்ளோ பெரிய கிரவுண்டில் 6 மாதம் வேலைகள் நடக்கவும் சிபிஐ மூலம் அறிந்தோம் இஜ்திமா நடக்க போகிறது என்றும் 10 லட்சத்திற்கும் மேல் கூடுவர் என்றும் அறிந்து பந்தோபஸ்து பாதுகாப்பு வேண்டுமா என கேட்டோம்.
இஜ்திமா குழுவின் தலைவர் நன்றி மேலும் அவசியபில்லை அதே சமயம் உங்கள் துறை பணி செய்ய நீங்கள் வந்தால் நாங்கள் தடுக்கப் போவதில்லை என்றனர்.
என் ஹெட் இன்ஸ்பெக்டரிடம் சார் 10 லட்சம் க்கு மேல் கூடும் கூட்டம் அதும் 3 நாள்க்கும் மேல் எனக்கு அங்கு பந்தோபஸ்து ட்யூட்டி போட வேண்டாம் எனக்கு பென்டு கழன்டுரும் என்றேன். இருந்தும் எனக்கு இஜ்திமா ட்யூட்டி 25.1.19 வெள்ளியன்று போட்டு ட்யூட்டி முடிந்து நேற்று இரவு இனாம்குளத்தூரிலிருந்து ஸ்டேசன் திரும்பி சென்றதும் சார் எனக்கு 4,5 நாள் ட்யூட்டியும் இஜ்திமா பந்தோபஸ்து ட்யூட்டி போடுங்க சார் என ரிக்வெஸ்ட் செய்தேன்.
என்னய்யா நேத்து போகல என்றாய் இன்று 4,5 நாள் ட்யூட்டி இஜ்திமாக்கு போறேன் என்கிறாய். பாய்ங்க பிரியாணில மயங்கிட்டியான்னு கிண்டலடித்து, ஏன் என்னய்யா என கேட்ட இன்ஸ்பெக்டரிடம் கூறிய விளக்கம் ஐ என்னிடம் கூறுகிறார்...
சார் போலிஸ் துறையில் 15 வருடம் பணி செய்கிறேன். நேற்று இன்று 2 நாள் இஜ்திமா பந்தோபஸ்து பணி அனுவம் மேலும் இனி 2 நாள் பணி என்னால் மறக்க முடியாது. காரணம் எங்கள் துறை வேலையை மட்டுமல்ல போக்குவரத்து ட்ராபிக் காவல்துறை, திருடு போலிஸ் கம்ப்ளைன்ட் கவுண்டர், தகவல் செக்ஸன் பூத் , காணாமல் போனோர் தகவல் மையம், இஜ்திமா தகவல் பூத் இப்படியாக எந்த துறைக்கும் யாருக்குமே எங்களுக்கு எந்த புகாரோ கேள்வியோ வேலையோ இல்லை. எங்களை யாரும் சட்டை செய்யல கேள்வி கேட்டு துளைக்கல ஃபுல் ரெஸ்ட் சார். என் வாழ்நாளில் முதல் முறை அதிகம் 10 லட்சம் க்கு மேல் கூடிய கூட்டமில் எனக்கோ என் துறை சார்ந்த யாருக்குமே எந்த வேலையும் இல்லை எந்த சிரமும் இல்லை. எந்தவித அசிங்க அவமானம் திட்டு வார்னிங் லட்டர் மெமோ இல்லை. இஜ்திமா ட்யூட்டி ரொம்ப மன மகிழ்ச்சி புத்துணர்ச்சி புது அனுபவம் சார் என்றார்.
எங்களின் அனைத்து வேலைகளையும் சீருடையுடன் கழுத்தில் பேட்ஜ் அணிந்து எங்களை விட மிக சிறப்பாக உங்க பாய்ங்க செய்து கொண்டுள்ளனர். யாருக்கும் எங்கும் வாய்ச் சண்டையோ கைச் சண்டையோ திருடு இல்லை. போலிஸ்க்கு வேலை இல்லை. ஆச்சரியமும் பிரமிப்பாகவும் இருக்கு சார் என்றவர் தொடர்கிறார்....
சார் முதல்வர் வருகிறார் என சில ஆயிரம் பேர் கூடும் கட்சிக் கூட்டம் or அரசு விழாவுக்கு 7, 8 , IAS, IPS ஆபிசர்ஸ் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடு ஓரிரு மாதம் முன் திட்டமிடப்பட்டு வேலைகள் மும்முரமாக நடந்து முடிந்து... இருந்தும் சேப்Fடி செக்யூரிட்டியில் விடுதல் குளறுபடிகள் வந்து தலைமை முதல் நாங்கள் வரை நன்கு திட்டு வாங்குவோம்.
முதல்வர் மாநாட்டுக்கு வரும் கட்சிக்காரர்களிடம் இங்கு கார் பார்கிங் கூடாது, உள்ளே கார் செல்ல அனுதியில்லை என்பேன். உடனே காருக்குள் இருந்து திட்டுவர் நான் யார் தெரியுமா ? மினிஸ்டர் உறவினர் , SP ன் நண்பன், வட்டம் , மாவட்டம், தலைவர் என்றெல்லாம் சொல்லி வாய்க்கு வந்தபடி திட்டி உன் பெயர் என்ன எனக் கேட்டு பின் எனக்கு நான் என் பணியை கடமையை சரியாக நேர்மையாக செய்தும் வார்னிங் லட்டர் மெமோ திட்டு எல்லாம் கிடச்சிருக்கு சார் என்றார். ஆனால் உங்க பாய்ங்க கார் மணிக்கு பல்லாயிரம் வருகிறது எந்த காரிலும் எவ்வித கொடியுமில்லை, இன்னும் MLA, MP எல்லாம் வந்தாங்க அவுங்க கார்ல கூட கட்சி கொடியில்லை. அணைவரும் காரை அவரவர் மாவட்ட ஒதுக்கப்பட்ட பார்க்கிங் ல அழகா நீட்டா பார்க்கிங் செய்து போறாங்க. எங்களுக்கு வேலையும் இல்லை எங்களை யாரும் திட்டு கோபமும் இல்லை என மனுசன் உண்மைகளை சொல்லி புகழ்ந்து தள்ளி விட்டார்.
கேட்டார் ... சார் 6 மாதம் இங்கு பணி நடந்தது. என்ன ஒரு வெல் ப்ளானுடு கிரேட் , இஜ்திமா பந்தலில் 34 மாவட்டங்களுக்கும் இடம் பிரித்து மேலும் மாவட்ட வாரியாக செப்பரேட் கார் பார்கிங் வெல் ப்ளான், ஓரே நேரமில் எல்லாரும் காரை எடுத்தாலும் ட்ராபிக் ஜாம் ஆகாது. ஆயிரக் கணக்கில் பாத்ரூம்ஸ், டாய்லெட்ஸ், ஹோட்டல் மெஸ், ரெஸ்ட் ஸ்லீப்பிங் ஹால் ஏரியா, ஆம்புலன்ஸ், ஃபயர் வண்டிகள், ஜெனரேட்டர்ஸ், செயற்கை பிரமாண்ட பிரமிக்கும் குளங்கள் Etc Etc.. எப்படி சார் எவ்வளவோ கோடிகள் சிலவு எப்படி சார் பணம் வசூலிப்பீரா ?
TV, செய்தி பேப்பர் & விளம்பரம் பேனர் அழைப்பிதழ் ஏதுமின்றி இவ்ளோ 10 லட்சத்திற்கும் மேல் என்ன ஒரு டிசிப்லின். கட்டுப்பாடு, பிரமிப்பு சார். என் வாழ்நாளில் இவ்ளோ பெரிய கூட்டம் பார்ப்பதும் ட்யூட்டியும் குற்றங்களின்றி எங்களுக்கு வேலை டென்சன் ப்ரஸ்ஸர் டார்ச்சர் தொந்தரவு திட்டு அசிங்க அவமானம் எதுவுமில்லை என்றார். இன்னும் நிறைய இஜ்திமா சிறப்பு & இஸ்லாமியர் ஒழுக்கம் சுய கட்டுப்பாடு மரியாதை நாகரீகம் பற்றி நிறைய புகழ்ந்து பேசினார் போலிஸ்காரர்.காரிலிருந்த நாங்கள் 5 பேர் குறுக்கே யாரும் எதும் பேசாது அவரையே பேச விட்டோம்.
கேள்விக்கு பதில் கூறினேன்: ஒரு ரூபாய் கூட யாரிடமும் நன்கொடை வசூல் இல்லை.வளிய விரும்பி வந்து தந்தவர்களின் லட்சம் கோடி ரூபாய்களை கூட நன்கொடைகளையும் வாங்காது மறுத்து விட்டனர். அந்தந்த மாவட்ட காரர்கள் ஜமாத்தினர் சிலவும் ஒரு சில பெரிய கொடை மனம் படைத்த கொடையாளர்களும் ஒவ்வொரு பெரிய பொறுப்பு அமைப்பு சிலவுகளை அவர்களாகவே தாமே முன்வந்து முன்னின்று பொறுப்பு ஏற்று செய்தனர். மேலும் ஒவ்வொரு ஊரிலும் வெள்ளி கிழமை ஜும்மா தொழுகைக்கு பின்னும் மசூதியில் அறிவிப்பு செய்தனர் என்றேன். தமிழகம் இந்தியா அனைத்து மாநிலங்கள் உலக நாடுகளிலிருந்தும் வந்துள்ளனர் என்றும் அரசியலோ சினிமாவோ தனிநபர் தாக்குதல் பேச்சோ இல்லை. எங்கள் இறைக்கட்டளை, இறைத்தூதர் வழிகாட்டல், ஒழுக்கம் , மனித நேயம் பற்றி மட்டுமே இஜ்திமாவில் பயான் பேசப்பட்டது என்றேன். பேச்சுக்களை மைக் ஸ்பீக்கர் மூலம் கேட்டோம் தெரியும் சார் சமயங்களில் ஹிந்தில (டில்லி மர்கஸ் அமீர் ஹஜ்ரத் ஜி செய்க் சாத் சாஹிப் மெளலானா ) பேசுனாங்க புரியலயேன்னு நினச்சப்ப அடுத்த நிமிடமே வேறொருவர் மிக அழகா தெளிவா புரியும்படி தமிழில் ( ராமநாதபுரம் அமீர் சாகிப் காசிம் மெளலானா ) நிமிடத்திற்கு நிமிடம் ஹிந்தியை தமிழில் மொழி பெயர்த்தார் அருமை சார் என்றார் போலிஸ்காரர் .
மணப்பாறை வந்தது சாப்பிட ஹோட்டல் செல்கிறோம் வாருங்கள் எங்களுடன் சாப்பிட்டு பின் உங்க வீட்டில் ட்ராப் செய்கிறேன் என்றேன். அவரோ சார் இஸ்லாமியர் மனிதநேயம் உதவும் குணம் விருந்தோம்பல் நன்கே அறிவேன் & அழைப்புக்கு நன்றி சார். எங்களை இஜ்திமா காரங்க அழைக்கல, நாங்களாக வந்து பாதுகாப்பு தருகிறோம் என்று கேட்டமைக்கு வேண்டாம் என கூறி விட்டு..வளிய வந்துள்ள எங்களையும் மனுசனா மதித்து தினம் 3 வேளை மட்டன் சிக்கன் பிரியாணி குஸ்கா நெய் சோறு டிபன் என விதவிதமா உணவு சூடா ருசியா மனமா நேரம் தவறாது எங்களுக்கு இஜ்திமா ஹோட்டல் மெஸ்ஸிலிருந்து உணவும் குடிநீரும் இலவசமாக அனுப்பி கிடைத்து விரும்பி மகிழ்சியா ஆண் பெண் காவலர்கள் பெருமையாக பேசிக்கிட்டே அமர்ந்து சாப்பிடுவோம் சார் என்றவர் மற்ற எந்த கூட்டம் க்கு பந்தோபஸ்துக்கு போனாலும் சாப்பாடு வேனாம் குடிக்க குடிநீர் கூட கிடைக்காது சார் என்று கூறிட்டு இங்கு என் பைக் உள்ளது வீடு போய் என் மனைவிட்ட இதெல்லாம் பூரிப்பா சொல்லணும் சார் என மகிழ்ச்சி பொங்க சொல்லி சிரித்தார்.
பஸ் ஸ்டாண்டில் இறங்கி நன்றி சார் என சிரித்து கை கூப்பி கும்பிட்டு விடைபெற்றார்.
Post a Comment