7 முஸ்லிம் மாணவர்களையும், பிணையில் விடுவிக்க முயற்சி - மைத்திரியுடன் ஆசாத் சாலி பேச்சு
கிரலகல புராதன தூபியில் கடந்த வருடம் (2018) ஏறி, படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட 7 முஸ்லிம் மாணவர்களையும் பிணையில் விடுவிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின், நேரடி கவனத்திற்கு இந்த விவகாரத்தை மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி கொண்டு சென்றுள்ளார்.
இதையடுத்து உடனடியாக பொலிஸ்மா அதிபரை தொடர்பு கொண்டுள்ள ஜனாதிபதி, குறித்த மாணவர்கள் குறித்து விசாரித்துள்ளார்.
இந்நிலையில் மாணவர்களின் விடுதலை தொடர்பில், சாதகமான முடிவுகள் எட்டப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment