Header Ads



7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்

கிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இது தெரியாமல் நடந்தது என கூறுவதை என்னால் நினைத்து பார்க்க முடியாது. பல்கலைகழகத்திற்கு செல்லும் மாணவர்கள் அவர்களின் உயர் அறிவிக்கு அமைய அனைத்து மத ஸ்தானங்களையும் பாதுகாக்க மற்றும் கௌரவப்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும்.

இதனை மிகவும் மட்டமான ஒரு  செயற்பாடாகவே நான் பார்க்கிறேன் .இது போன்ற செயற்பாடுகளை வேறு எவரும் செய்யா முடியாத வகையில்  இவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க உறுதிபூண்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டார். MN

14 comments:

  1. Future president of the country; No future for Sri lanka......

    ReplyDelete
  2. முஸ்லிம்களுக்கு எதிரான அளுத்கம, கண்டி திகன கொடூர தாக்குதல்கள் எல்லாம் இவருக்கு மட்டமான செயலாகத் தெரியவில்லை போலும்.
    நாட்டில் நடக்கும் பங்குறத்து அரசியல் அராஜகம், கொலை, கொள்ளை, களவு போன்ற செயல்களெல்லாம் மட்டமான செயலாகத் தெரியவில்லை போலும்.
    எந்தப் பிரச்சினையை எவ்வாறு கையாள வேண்டும் என்ற பகுத்தறிவு கூட இல்லாத அரசியல்வாதி.
    முஸ்லிம்கள் இவ்வாறான தகாத செயல்களை விட்டும் தவிர்ந்து நடக்க வேண்டும்.

    ReplyDelete
  3. statmemt of Minister is correct but unfortunatly we have to lern this lession from these students.

    ReplyDelete
  4. Mr.future president, this is we r not expected frm u

    ReplyDelete
  5. இவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி என்று சொல்லும் முஸ்லிம் அரசியல் ஞானிகளே, இவரது பக்குவம், அரசியல் முதிர்ச்சி எந்தளவென்று விளங்குகிறதா? பௌத்த மக்கள் பெரிது படுத்தாத இவ்விடயத்தை அமைச்சர் ஊதிக்கெடுத்து விடுவார் போல, அழுத்கம சம்பவம் மஹிந்தவினால் இரண்டாவது நாளே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் நல்லாட்சிக்காரர்களால் அரங்கேற்றப்பட்ட திகன பிரச்சினை எத்தனை நாட்கள்? அழுத்கம பிரச்சினைக்கு காரணமான இரு அமைச்சர்களும் இந்த அமைச்சரவையில்தான் இருக்கிறார்கள். அவர்களையும் விட நான் மோசமானவன் என இவர் சொல்லாமல் சொல்கிறார். இதற்கும் முஸ்லிம் சமூகம் மஹிந்தவைத்தான் குற்றம் சாட்டும். அதுதான் நமது நாட்டை பந்தாடும் நோர்வேயினதும், யூத இலுமினாட்டிகளினதும் திறமை.
    எப்படியோ சஜித்திடம் பேசிப்பயனில்லை என்று உணர்ந்து அமைச்சர்கள் ஹக்கீமும் றிசாததும் ஜனாதிபதியுடன் பேச வேண்டும்.

    ReplyDelete
  6. இவன் கோடிட்டு காட்டிவிட்டான் இவன் எவ்வாறானவன் என்று இவனை நல்லவன் என்று சொல்லும் மடையர்கள் திருந்துங்கள்

    ReplyDelete
  7. We shouldn't blame the minister simply for his statement. If the racist take this as a bad example to damage the worship places of others who is going to take responsible for those. My opinion is to take action to nib in the bud. It may be a reasonable stand of the minister otherwise he will be branded as a supporter of the Muslims and take upper hand on their radical works. Let the court to decide on this matter. It is good for us

    ReplyDelete
  8. முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.

    (அல்குர்ஆன் : 49:6)   www.tamililquran.com

    ReplyDelete
  9. Digana insident masjith in side you didn't see .but every one know

    ReplyDelete
  10. உங்கள் சேவை தொடரட்டும் அமைச்சரே ஒரு முன் உதாரணமாக இருக்கட்டும்

    ReplyDelete
  11. WARNING : this is election year. we must step out of our house with utmost care as any small incident can be used by bad politicos to gather more votes to them and it will bring disaster to us. always better to avoid visiting places where other religions involved.

    ReplyDelete
  12. இவர் அடுத்த ஜனாதிபதியா?

    ReplyDelete
  13. இதுவரை இவரால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட்வை ???

    இதுவே இறைப்பற்றி அறிந்து கெ ாள்ள சிறந்த உதாரணம்.

    ReplyDelete
  14. Respect other religion and religious places becoz its best humanity

    ReplyDelete

Powered by Blogger.