Header Ads



மாலியில் ஒரு சிறிலங்கா, சிப்பாயின் நிலை கவலைக்கிடம் - 2 உடல்கள் புதன் நாட்டுக்கு வருகின்றன

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.நா அமைதிப்படையில் இடம்பெற்றுள்ள சிறிலங்கா படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரின் நிலை மோசமான நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றுமுன்தினம் காலை ஐ.நா வாகனத் தொடரணிக்கு பாதுகாப்பு அளித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த போது, சிறிலங்கா இராணுவ அணியின் துருப்புக்காவி கவசவாகனம் ஒன்றின் மீது டோன்ட்சா என்ற இடத்தில் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் கப்டன் உள்ளிட்ட இரண்டு சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். மேலும், 6 படையினர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள், ஐ.நா அமைதிப்படையில் உள்ள கனடிய விமானப்படையின் மீட்பு உலங்குவானூர்தி மூலம், 400 கி.மீ தொலைவில் உள்ள சீன மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவரின் நிலை மோசமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலை நடத்தியவர்கள் இன்னமும் உரிமை கோரவில்லை.

அதேவேளை கொல்லப்பட்ட இரண்டு சிறிலங்கா படையினரதும் சடலங்கள் வரும் புதன்கிழமை கொழும்புக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

No comments

Powered by Blogger.