இன்றைய UPFA கூட்டத்தில் மகிந்த இல்லை - தேர்தலை வெற்றிகொள்ள எதிர்பார்த்துள்ளோம் என்கிறார் அமரவீர
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் இன்று (24) நடைபெற்றது.
கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று காலை இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற கூட்டம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த வருடத்திற்கான இறுதிக் கூட்டமே நடைபெற்றது. ஜனவரி மாதமும் நிறைவேற்றுக் குழு கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். அரசியல் நிலைமைகளை கருத்திற்கொண்டு மாதாந்தம் இந்த கூட்டத்தை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அனைத்து பிரதிநிதிகளும் இன்று கலந்துகொண்டனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இதில் கலந்துகொள்ளவில்லை. தற்போதைய அரசாங்கத்தில் காணப்படும் குறைபாடுகள், பிரச்சினைகள் என்பன தொடர்பில் இன்று கலந்துரையாடப்பட்டுள்ளது. அனைவரையும் ஒன்றிணைத்து செயல்படுவதுடன், எதிர்வரும் தேர்தலை வெற்றிகொள்ள எதிர்பார்த்துள்ளோம்
எனத் தெரிவித்துள்ளார்.
Post a Comment