Header Ads



அரசியல் நெருக்கடியால் UNP பலமடைந்துவிட்டதாக, சிலர் கருதுகின்றனர் - எனினும், நிலைமை அதுவல்ல

இவ்வாறுதான் உயர்நீதிமன்ற தீர்ப்பை உடன் வழங்குமாறு நீதியரசர்களுக்கு எம்மால் அழுத்தம் கொடுக்கமுடியாது. எனினும், துரிதப்படுத்துமாறு கோரிக்கை முன்வைக்கலாம்.”

இதன் அடிப்படையில் கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“நீதிமன்றில் தீர்ப்பு வெளியானதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய முடியும். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியால் ஐக்கிய தேசியக்கட்சி பலமடைந்துவிட்டதாக சிலர் கருதுகின்றனர்.

எனினும், நிலைமை அதுவல்ல. நீதிமன்றில் தீரப்பு வெளியானதன் பின்னர் அந்த கட்சி மூன்றாக உடையும். அதன் பின்னர் எமது அணியினர் வெற்றிப்பாதையில் நடப்பார்கள்.

நாடாளுமன்ற தேர்தல நடத்துவதே தற்போதைய பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு. எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.