ஜப்னா முஸ்லிம் செய்தியினால், ரணிலிடம் சென்று மேலதிக அமைச்சை பெற்ற அரசியல்வாதி
"இப்படியும் நடந்தது"
மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திப்பை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மூலமாக jaffna muslim இணையத்திற்கு ஒரு தகவல் கிடைத்தது.
அதாவது, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கும் அமைச்சு என்னவென்பது.
அதன்படி அந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு குறித்த அமைச்சுதான் கிடைக்குமென jaffna muslim இணையம் செய்தி வெளியிட்டது.
இதை படித்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர், உடனடியாக 19.12.2018 இரவு அன்று ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து, தனக்கும் மேலதிக அமைச்சுப் பதவி தர வேண்டுமென வாதிட்டார்.
அதன்படி 20.12இ2018 அன்று நடந்த அமைச்சரவை பதவியேற்பின்போது, குறித்த அந்த அரசியல்வாதிக்கு மேலதிகமாக ஒரு அமைச்சுப் பதவி கிடைத்து.
இந்த தகவலை அமைச்சராக பதவியேற்ற தினமே, ஒரு அரசியல்வாதி jaffna muslim இணையத்துடன் தொடர்புகொண்டு உறுதிப்படுத்தினார்.
இன்று 22 சனிக்கிழமையும் மற்றுமொரு இராஜாங்க அமைச்சரும், இந்த தகவலை வட்சப் மூலமாக jaffna muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.
அந்த அடிப்படையில் இந்த தகவல், இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
எப்படியோ jaffna muslim இணையச் செய்தியினைப் படித்து, ரணிலிடம் சென்று மேலதிக அமைச்சுப் பதவி பெற்றுக்கொண்ட அரசியல் வாதிக்கு வாழ்த்துக்கள்...!
உண்மையில் இந்த செய்தி jaffna முஸ்லீம் இணைய தளத்திட்கு கிடைத்த அங்கீகாரம் என்று சொல்லலாம். இந்த செய்தி தளத்தின் செய்திகள் நம்பகமானது என்று வாசகர்களுக்கு ஒரு நம்பிக்கை பிறக்கிறது.
ReplyDeleteஇருந்தாலும் இன்னொரு புரத்தால் யோசித்து பார்க்கும் போது மறைந்து இருக்கும் உண்மை யாதெனில், தனக்கு என்ன அமைச்சு பொருத்தமானது, தனது அறிவுக்கும் அனுபவத்துக்கும் என்ன அமைச்சு கிடைத்தால் மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்ற நோக்கத்தில் அமைச்சு பதவி கேட்காமல் jaffna முஸ்லீம் செய்தியை பார்த்துவிட்டு போய் அமைச்சு பதவி கேட்டு பெற்றுக் கொண்டு இருப்பது, தனது பதவி ஆசையையும் அவர்களது அறியாமையையும் காட்டுவதோடு இப்படிப்பட்ட அமைச்சர்கள் தான் எமக்கு சேவை செய்ய இருக்கின்றார்கள் என்று நினைக்கும் பொது கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கின்றது.
உண்மையில் ஏனைய மொழியில் இணையத்தளங்களில் செய்திகள் வரமுன்பே ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் செய்திகளை அதுவும் பெரும்பாலும் சரியாக பிரசுரம் செய்வது எங்களுக்கு மிகவும் திருப்தியாக இருக்கின்றது. ஏனைய தளங்களை பார்க்க முன்பு நாம் இதனைத்தான் முதலில் பாரக்கும் பழக்கம் மிக நீண்ட காலமாக நாம் கடைப்பிடித்து வருவதற்குக் காரணமும் அதன் நம்பகரத்தரம் தான். தொடர்ந்தும் இந்த நெறிமுறையை பிரழாது கடைப்பிடிக்குமாறு பொறுப்பானவர்களிடம் வினயமாக வேண்டுகின்றோம்.
ReplyDeleteDear Jaffna Muslim: யார் அந்த கேடி என்று அரிய அவலாய் உள்ளேன்.
ReplyDelete