சுதந்திரக் கட்சியிலிருந்து, பாய்ந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
கட்சியிலிருந்து விலகி சென்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.
இதற்காக குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நடைபெறவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்தின் போது இது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
கட்சியிலிருந்து விலகி சென்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென கடந்த மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் தரப்பில் அமைர்ந்தனர்.
இந்த நிலையில் இந்த மூன்று உறுப்பினர்கள் தொடர்பில் உரிய தீர்மானம் எட்டப்படுமென ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment