Header Ads



மரணித்த கணவருக்காக, பள்ளிவாசல் கட்டிய சகோதரி


இறந்த கணவருக்காக தன் கணவர் பெயரிலேயே பள்ளிவாசல் கட்டியுள்ளார் சவூதி நாட்டை சேர்ந்த பெண்மணி. 30 வருடமாக வந்த கணவரின் பென்சன் பணத்தை சேமித்து செய்த இந்த செயலால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.

பொதுவாகவே, கணவனிடம் வாழப் பிடிக்கவில்லை என்று விவாகரத்து செய்யும் பெண்களையும், கணவன் தலையில் கல்லைப் போட்டுக் கொள்ளும் பெண்களைப் பற்றிய செய்திகளையும் தான் அடிக்கடி நாம் படித்திருக்கிறோம். இது போக ஜீவனாம்சமாக பல கோடி தரவேண்டும், ஆடம்பர வாழ்க்கை அமைத்துத் தர வேண்டும் என்று நீதிமன்றம் செல்லக்கூடிய பெண்கள் மத்தியில், அன்பு, பாசம் மற்றும் காதலை பறை சாற்றும் விதமாக முன்னுதாரணமாக இருக்கிறார் சவூதி நாட்டை சேர்ந்த பெண்.

இறந்த தன் கணவருக்காக, அவர் பெயரில் வரும் பென்சன் பணத்தை சிறுக, சிறுக சேமித்து, தன் கணவர் பெயரிலேயே ஒரு பள்ளிவாசலை கட்டியுள்ளார் ஒரு பெண்மணி. இது குறித்து இப்பெண்ணின் மகன், தனது தாயாரை பாராட்டி பதிவு செய்துள்ள ட்விட்டர் டிரண்டாகி வருகிறது.

இவரது மகன் முஹம்மது அல் ஹர்பி தனது ட்விட்டரில்,

நீங்கள் எவ்வளவு சிறந்தவர் அம்மா, நீங்கள் நினைத்திருந்தால் அத்தாவின் பென்சன் பணத்தில் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். ஆனால் ஒவ்வொரு ரியாலையும் சேமித்து வைத்து தந்தையின் பெயரிலேயே பள்ளிவாசலை உருவாக்கியுள்ளீர்கள். தந்தைக்கு இறைவன் சொர்கத்தை அருள்வானாக” என்று பதிவு செய்துள்ளார்.


இந்த பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சொர்க்கத்தில் உங்கள் இருவரையும் இணைப்பானாக என்று மக்கள் அவர்களுக்கு வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்து வருகிறார்கள். நாமும் அதே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மும்தாஜ் மீது கொண்ட காதலால் தாஜ்மகாலை கட்டினார் ஷாஜகான். அது காதலின் அடையாள சின்னமாக கருதப்பட்டு, உலக அதிசயமாக இருக்கிறது. ஆனால் அதை விட, இறந்த கணவருக்காக 30 வருடங்களாக சேமித்து வைத்த பணத்தில் இந்த ஏழை பெண்மணி கட்டிய பள்ளிவாசல் சிறந்தது என்றால் மிகையாகாது.


مواطن ينشر صورة لوالدته داخل مسجد استطاعت بناءه بادخار راتب تقاعد زوجها الذي توفي قبل ٣٠ عامًا، وأهدت ثوابه لزوجها..

4 comments:

  1. May Allah Reward This wife in rewards in many folds and Let us realize how nice people are living in this holy land.

    ReplyDelete
  2. உலகத்தில் செய்வதற்கு எவ்வளவோ நல்ல காரியாய்ந்கள் இருக்கும் பொழுது, பள்ளிவாசல் கட்டிக் கொடுப்பது மட்டும்தான் உயர்ந்த செயல் என்கின்ற எண்ணத்தை முஸ்லிம்கள் கொண்டிருப்பது ஆரோக்கியமானது அல்ல.

    ஒருமுறை வெள்ள நிவாரணத்திற்காக முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களும் இணைந்து மடவளையில் நிவாரணம் சேர்த்துக்கொண்டு இருந்த பொழுது ஒரு வாகனம் நிறுத்தப்பட்டது, அதிலே ஒரு அரபுக் குடும்பம் (சுற்றுலா பயணிகள்) இருந்தனர். கூட்டமாக தொப்பி அணிந்த, அணியாத இளைஞர்கள் அங்கேயும், இங்கேயும் அலைவதை பார்த்த அந்த அரபி என்ன விடயம் என்று அரபியில் கேட்டார். சவுதியில் பத்துவருடங்கள் வரை வேலை செய்த ஒரு சிங்கள இளைஞர் முன்வந்து அந்த அரபியுடன் அரபி மொழியில் பேசி, வெள்ளம் பற்றியும், சேதங்களை பற்றியும் விளங்கப் படுத்தினார். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இருந்த அந்த அரபி அரபியில் பதில் சொன்னார், அல்லாஹ், அல்லாஹ், மஸ்ஜித், மஸ்ஜித் என்று சொல்வது மட்டும்தான் எமக்கு புரிந்தது. அந்த சிங்களவர் அவர் சொன்னதை மொழி பெயர்த்து சொன்னார். "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக துஆ செய்ய வேண்டும். பள்ளிவாசல் கட்டுவதற்கு வேண்டுமானால் நான் பணம் தருகின்றேன், பள்ளிவாசல் வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்" என்றாராம். எமக்கோ அவமானம் தாங்க முடியவில்லை. அவரை பீஅமாநில்லாஹ் சொல்லி அனுப்பிவிட்டோம்.

    மஸ்ஜித் மஸ்ஜிதாக கட்டுவதை விட, பத்து ஏழைகளுக்கு வாழ்வதற்கு வீடுகளை கட்டிக் கொடுப்பது அவசியமான தேவை. முறையான வீடுகள் இல்லாத காரணமே சேரிப்புறங்கள் பெருகவும், அதனால் சீர்கேடுகள் ஏற்படவும் காரணம், இதனையெல்லாம் பள்ளிவாசல் மட்டும் கட்டுவதால் சீர்செய்து விட முடியாது.

    ReplyDelete
  3. இயக்கவெறி தலைக்கு ஏறிவிவிட்டதால் ஒருவர் செய்த நல்ல செயலைக் கூட ஏற்றுக் கொள்ள இவர்களின் உள்ளங்கல் இடம் கொடுப்பதில்லை. இந்த பெண்ணின் சிறந்த செயலை யெமனுடன் தொடர்பு படுத்துவது இவர்களின் இயக்கக் கொள்கை வெறியினையும் அறிவற்ற தன்மைகளையும் தெளிவாகவே காட்டுகின்றது...

    ReplyDelete
  4. May Allah guide these brothers...

    if this women had done this good deed from the soil of Turkey.. these brothers would have supported. May Allah guide my brothers in peace and justice. .

    ReplyDelete

Powered by Blogger.