சுவிற்சர்லாந்தில் நீதிமன்றத்திற்கு வந்துள்ள, விசித்திர வழக்கு
வழக்கமாக ரயில்கள் லேட்டாக வருவதால்தான் பிரச்சினை ஏற்படும். ஆனால் ரயில் லேட்டாக வராமல், ஒரு நிமிடம் முன்னதாகவே புறப்பட்டும், ஒருவர் ரயில்வேமீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
நடந்த சம்பவம் என்னவென்றால், Sebastian Heitkamp என்பவர் சூரிச்சின் Enge ரயில் நிலையத்திலிருந்து Winterthur செல்வதற்காக, அடித்துப் பிடித்து ஓடி வந்தார்.
ரயில் புறப்படவேண்டிய நேரம் காலை 6.18, ஆனால் ரயில் 6.17க்கே புறப்பட்டு விட்டது.
ஓடி வந்தும் Sebastianஆல் ரயில் செல்வதை, வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது. அடுத்த அரை மணி நேரத்திற்கு ரயில் எதுவும் இல்லை.
முக்கியமான மீட்டிங் ஒன்றிற்கு செல்ல வேண்டியிருந்ததால், Sebastian டாக்சி பிடித்து அலுவலகம் சென்று சேர்ந்தார்.
நேரத்திற்கு அலுவலகம் சென்று விட்டாலும், அவருக்கு 180 சுவிஸ் ஃப்ராங்குகள் செலவானது.
ரயில்வே நிர்வாகம் சம்பவம் நடந்ததை ஒப்புக் கொண்டாலும், முன்னரே புறப்படுவதில் தவறு ஒன்றும் இல்லை, அது நல்லதுதான் என்று வாதிட்டது.
இதனால் Sebastian இழப்பீடு கோரி, ரயில்வே மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
Post a Comment