ஜனாதிபதி வேட்பாளராக ரணிலை, களமிறக்க தீர்மானம்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை களமிறக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தேர்தல் நெருங்கி வரும்போது, கலந்தாலோசித்து வெற்றி பெறக்கூடிய ஒருவரை வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “அண்மையில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பம் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியில் பல தலைவர்கள் உருவாகியுள்ளார்கள்.
இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப்போவதில்லை. ஐக்கிய தேசியக் கட்சியில் வெற்றியீட்டும் பல தலைவர்கள் இருக்கின்றனர்.
எவ்வாறாயினும், தம்முடன் போட்டியிடுவது, மொட்டா அல்லது சுதந்திரக் கட்சியா என்பதிலேயே பிரச்சினை இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment